கோவை: கோவை அருகே அம்மன் கோவிலுக்குச் சொந்தமான 6-கோடி மதிப்பிலான நிலத்தைத் தனியாருக்குச் சொந்தமான செங்கல்சூளையாகப் பயன்படுத்தப்பட்டு வந்ததைக் கண்டறிந்து இன்று கோவில் அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.

கோவை தடாகம் பகுதியில் உள்ள அங்காளம்மன் மற்றும் மாரியம்மன் கோவில்களுக்குச் சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது. இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்குத் தெரிய வந்தது.
இதுதொடர்பாக, அங்கு ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் கடந்த 2-மாதங்களுக்கு முன்னர் கோவில் நிலத்தினை ஆக்கிரமிப்பு செய்து செங்கல் சூளை நடத்தி வந்த அதே பகுதியைச் சேர்ந்த ரங்கராஜ், தென்னரசு ஆகியோருக்கு இந்து சமய அறநிலைய சட்டப்படி நோட்டீஸ் கொடுத்து இருந்தனர்.

இந்நிலையில், ஆக்கிரமிப்புகளை அவர்கள் அகற்றிக் கொள்ளாத நிலையில் இன்று 6-கோடி ரூபாய் மதிப்புடைய 8.8-ஏக்கர் கோவில் நிலத்தை அதிகாரிகள் மீட்டனர்.

மேலும் கோவில் நிலத்தில் செயல்பட்ட செங்கல் சூளைகள் மற்றும் செங்கல் உலர்த்தும் இடம் போன்றவற்றை பொக்லைன் மூலம் அதிகாரிகள் இடித்து அப்புறப்படுத்தினர்.
பின்னர், இந்த இடம் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமானது என அறிவிப்புப் பலகையையும் அதிகாரிகள் வைத்தனர்.
நீண்ட காலமாகச் செங்கல் சூளை நடத்துபவர்களால் ஆக்கிரமிப்பு செய்யப் பட்ட இந்த கோவில் நிலம் மீட்கப்பட்டு இருப்பது அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.