கோவையில் மட்டன் கடை வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 40-பவுன் நகை ரூ.3-லட்சம் ரொக்கம் திருட்டு.!!

கோவை: கோவையில் நாளுக்கு நாள் தொடர்ந்து வீட்டின் பூட்டை உடைத்துத் திருடும் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.


கோவை: கோவையில் நாளுக்கு நாள் தொடர்ந்து வீட்டின் பூட்டை உடைத்துத் திருடும் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

கோவை சிங்காநல்லூர் பகுதியில், மட்டன் கடை வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து வீட்டில், இருந்த 40-பவுன் நகை 3-லட்சம் ரொக்கத்தைத் திருடர்கள் கொள்ளையடித்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து 40-பவுன் நகைகள், ரூ.3-லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

கோவை, சிங்காநல்லூர் பகுதியில் உள்ள நந்தா நகரை சேர்ந்தவர் சுரேஷ் குமார். இவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு தனது உறவினர் வீட்டு விசேஷத்துக்காக ஈரோட்டுக்கு குடும்பத்துடன் சென்றிருந்தார்.

இந்நிலையில், நேற்று மாலை அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக அக்கம்பக்கத்தினர் அவருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, ஈரோட்டிலிருந்த சுரேஷ்குமார், சிங்காநல்லூர் காவல்துறைக்கு இது குறித்து தகவல் தெரிவித்தார்.

இதன்பேரில், சம்பவ இடத்துக்கு போலீஸாா் சென்றனர். வீட்டின் பீரோவில் 40 பவுன் நகைகள், ரூ.3 லட்சம் ரொக்கம் இருந்ததாக சுரேஷ்குமார் காவல்துறையிடம் தெரிவித்தார்.

இதன்பேரில் போலீஸாா் வீட்டுக்குள் ஆய்வு செய்தபோது அவர் கூறிய நகைகள் மற்றும் பணம் திருடுபோயிருந்தது தெரியவந்தது.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். தொடரும் திருட்டு சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

Newsletter

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...