கோவை: கொரோனா 3-வது அலை தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கோவை மாவட்டத்தில் சமூக நலத்துறையின் கீழ் உள்ள முதியோர் இல்லங்களில் முதியோர்களுக்குத் தினமும் காய்ச்சல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் சமூக நலத்துறையின் கீழ் 30-க்கும் மேற்பட்ட முதியோர் இல்லங்கள் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வருகிறது. இந்த முதியோர் இல்லங்களில் 819-முதியோர்கள் தங்கியுள்ளனர்.
மகன், மகள், உறவினர்கள் போன்றவர்களால் கைவிடப்பட்டவர்களும், தனிமையில் வசித்தவர்களும் என ஆதரவற்ற முதியோர்கள் தான் இந்த இல்லங்களில் பெரும்பாலும் உள்ளனர்.
கொரோனா 3-வது அலை தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதியோர்களைக் கண்காணிக்கும் விதமாக மாவட்டத்தில் சமூக நலத்துறையின் கீழ் உள்ள 30-முதியோர் இல்லங்களில் உள்ள முதியோர்களுக்கு கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் அவர்களுக்குத் தினமும் காய்ச்சல் உள்ளதா? என வெப்ப அளவு பரிசோதனையும் செய்யப்பட்டு வருகிறது.
இது குறித்து சமூக நலத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "முதியோர் இல்லங்களுக்கு நேரடியாகச் சென்று முதியோர்களிடம் கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வை அதிகாரிகள் அளித்து வருகின்றனர்.
காய்ச்சல் பரிசோதனைகள் மேற்கொள்வதுடன் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க ஜிங் போன்ற விட்டமின் மாத்திரைகள் மருத்துவரின் பரிந்துரைப்படி வழங்கப்படுகிறது.
மேலும் வாட்ஸ் ஆப் குரூப் மூலமும் தினமும் முதியோர் இல்லங்கள் கண்காணிக்கப்படுகிறது. இந்த குரூப்பில் முதியோர் இல்லங்களுக்குச் சென்றுவிட்டு அங்கு மேற்கொள்ளப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், காய்ச்சல் பரிசோதனை தொடர்பாகவும் அதிகாரிகள் பதிவிடுவார்கள்," என்றார்.