கோவையில் ஆன்லைன் கல்வி பயிலமுடியாத மலைவாழ் மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கிய ஸ்கூல் நெட் இந்தியா நிறுவனம்..!

கோவை: கோவையில் ஆன்லைன் கல்வி பயிலமுடியாத மலைவாழ் மாணவர்களுக்கு "ஸ்கூல் நெட் இந்தியா" நிறுவனம் உபகரணங்கள் வழங்கியுள்ளது.


கோவை: கோவையில் ஆன்லைன் கல்வி பயிலமுடியாத மலைவாழ் மாணவர்களுக்கு "ஸ்கூல் நெட் இந்தியா" நிறுவனம் உபகரணங்கள் வழங்கியுள்ளது.

கோவை மாவட்டம் கேரள - தமிழக எல்லைப்பகுதி மாவுத்தம்பதி ஊராட்சிக்குட்பட்ட, சின்னாம்பதி பழங்குடியின கிராமத்தில், 80க்கும் மேற்பட்ட குடும்பங்களில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கின்றனர்.

இணையதள வகுப்புகள் குறித்து என்ன என்று கேட்கும், இக்குழந்தைகளின் பெற்றோர்களுக்கு பெரிய வசதிகள் இல்லாததால் படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், கொரோனா ஊரடங்கும் அறிவிக்கப்பட்டதால், படிப்பு வாசனையே அறியாத அப்பெற்றோரின் குழந்தைகள், வீதி வீதியாக விளையாடியபடி, பொழுதை கழித்து வந்தனர். இக்குழந்தைகளை திரட்டி, தனது வீட்டையே பள்ளியாக மாற்றினார் அப்பகுதியின் முதல் பட்டதாரியான சந்தியா.

வாசித்தல், எழுதுதல், ஓவியம் வரைதல், கணக்கு போடுவது என ஒற்றை ஆளாக, தனது கிராம குழந்தைகளை வழிநடத்தி வந்தார். இது தொடர்பாக பல்வேறு செய்தி தொலைக்காட்சிகள், சமூக வளைதளங்கள் செய்தி வெளியிட்டு இருந்தன. இதனை அறிந்த "ஸ்கூல் நெட் இந்தியா" என்ற தனியார் நிறுவனம் சி.எஸ்.ஆர் நிதி மூலம் அம்மலைவாழ் மாணவர்களின் கல்வியை கருத்தில் கொண்டு சுமார் ரூ.3லட்சம் மதிப்பிலான கல்வி மற்றும் விளையாட்டு உபகரணங்களை வழங்கியுள்ளது.



சின்னாம்பதி கிராமத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட ஸ்கூல் நெட் இந்தியா நிறுவனத்தின் துணை தலைவர் ராஜேஷ் சோமன், கணிப்பொறி, ஆங்கிலம் பயில "English bolo software", மற்றும் மல்டிமீடியா உள்ளிட்ட காட்சி வாயிலாக பயிலும் விதமாக ஒருங்கிணைந்த k-yan உபகரணம், நோட்டு, புத்தகங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.

இதுகுறித்து ஸ்கூல் நெட் இந்தியா நிறுவன கோவை மண்டல பொறுப்பாளர் பரத் கூறும்போது: ஸ்கூல் நெட் இந்தியா நிறுவனம் ஆந்திரா, மகாராஷ்டிரா மாநிலங்களில் கல்விக்கென பல்வேறு புராஜக்ட்களை செயல்படுத்தி வருவதாகவும் கோவை சின்னாம்பதி மலைவாழ் கிராம மாணவர்களுக்கு கல்விக்கான உபகரணங்களை வழங்கியுள்ளதன் மூலம் அவர்களுக்கான கல்வி தடையில்லாமல் கிடைக்கும் என்றார்.



மேலும், கோவையில் புதிதாக "டிஜிட்டல் மின்மினி விளக்கு" என்ற திட்டத்தை துவக்கியுள்ளதாகவும் இதன் மூலம் அம்மாணவர்களின் கல்வித்தரம் குறித்து மாத மாதம் தகவலறிக்கை சேகரித்து கண்காணிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.



இந்நிகழ்வில் தென்னிந்திய பயிற்சி பொறுப்பாளர் அமிதாபானு, மலைவாழ் ஆசிரியரான சந்தியா, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...