திருப்பூர் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்களிடம் தகாத வார்த்தைகள் பேசி, மன உளைச்சலுக்கு ஆளாக்கிய டீன்.!!

திருப்பூர்: திருப்பூர் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்களிடம் தகாத வார்த்தைகள் பேசி, மன உளைச்சலுக்கு ஆளாக்கிய டீன் முருகேசன் மற்றும் துணை உறைவிட மருத்துவர்களைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்களிடம் தகாத வார்த்தைகள் பேசி, மன உளைச்சலுக்கு ஆளாக்கிய டீன் முருகேசன் மற்றும் துணை உறைவிட மருத்துவர்களைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூர் அரசு மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். தற்போது திருப்பூர் அரசு மருத்துவமனை, அரசு மருத்துவமனை கல்லூரியாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

இதனிடையே திருப்பூர் அரசு மருத்துவமனை டீனாக நியமிக்கப்பட்டுள்ள முருகேசன், அங்கு பணியாற்றும் செவிலியர்களிடம் விரோத போக்கைக் கையாண்டு வருவதாகவும், துணை உறைவிட மருத்துவர்கள் வினோத், செந்தில் ஆகியோர் தகாத வார்த்தைகளால் பேசுவதாகவும், செவிலியர்களுக்கு உடை மாற்றக் கூட அறை தரமறுப்பதாகவும் கூறி இன்று 50க்கும் மேற்பட்ட செவிலியர்கள் அரசு மருத்துவமனை வளாகத்தில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து செவிலியர்கள் கூறுகையில், திருப்பூர் அரசு மருத்துவமனையில் 174 நிரந்தர செவிலியர்கள், 51 ஒப்பந்த செவிலியர்கள், 22 தற்காலிக செவிலியர்கள் என 200க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகிறோம். மருத்துவமனை டீன் முருகேசன் மற்றும் துணை உறைவிட மருத்துவர்கள் வினோத், செந்தில் ஆகியோர் எங்களுக்குக் கூடுதலாக பணிகள் கொடுத்து, தாகத வார்த்தைகள் பேசி மன உளைச்சல் ஏற்படுத்துகின்றனர்.

பணி நேரத்தில் பெண்களுக்கு உடை மாற்றும் அறை கூட கொடுக்க மறுக்கின்றனர். செவிலியர்களுக்கான பணிகளை விடுத்து மற்ற பணிகளைச் செய்ய வற்புறுத்தி வருகின்றனர்.



எங்களுடைய கோரிக்கைகளைக் கண்டுகொள்ளாமல் விரோத போக்கைக் கையாண்டு வருகின்றனர். எனவே டீன் முருகேசன் மற்றும் துணை உறைவிட மருத்துவர்கள் வினோத், செந்தில் ஆகியோரை பணியிட மாற்றம் செய்யத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈட்டுப்பட்டுள்ளோம் என்றனர்.

Newsletter

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...