திருப்பூரில் மதுபான கூடங்களில் முறைகேடாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்கள் பறிமுதல்.!! உரிமையாளர்கள் உட்பட 6-பேர் கைது.!!

திருப்பூர்: திருப்பூரில், மதுபானக் கூடங்களில் முறைகேடாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 3-ஆயிரத்து 500 -மதுபாட்டில்கள் பறிமுதல் செய்து மதுபானக் கூட உரிமையாளர்கள் உட்பட 6-பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


திருப்பூர்: திருப்பூரில், மதுபானக் கூடங்களில் முறைகேடாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த,3-ஆயிரத்து 500 -மதுபாட்டில்கள் பறிமுதல் செய்து மதுபானக் கூட உரிமையாளர்கள் உட்பட 6-பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில், கொரோனா தொற்று பரவலை ஒட்டி புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அரசு மதுபானக் கடைகள் காலை 10-மணி முதல் மாலை 5-மணி வரை மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பல்வேறு பகுதிகளிலும் 5-மணிக்கு மேல் விற்பனை செய்வதற்காக, மதுபாட்டில்கள் பதுக்கி விற்பனை நடைபெறுவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து திருப்பூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர்சவுந்தரபாண்டியன், கலால் உதவி ஆணையர் சுகுமார் மற்றும் அனுப்பர்பாளையம் போலீஸார் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தனர்.



அப்போது திருப்பூர் காந்திநகர் பகுதியில் எதிரெதிரே உள்ள இரண்டு மதுபானக் கூடங்கள் மற்றும் கூலிபாளையம் சாலை ஆகிய பகுதிகளில் ஆய்வில் பெட்டி, பெட்டியாக மதுபாட்டில்கள் பதுக்கி அதிக விலைக்கு விற்பதை போலீஸார் கண்டறிந்தனர்.

இதையடுத்து அங்கிருந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான சுமார் 3-ஆயிரத்து 500-மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக மதுபானக் கூட உரிமையாளர்கள் மகாலிங்கம், தனபால் மற்றும் அவர்களது மதுபானக் கூடத்தில் வேலை செய்த 4-பேர் என மொத்தம் 6-பேர் மீது, அனுப்பர்பாளையம் போலீஸார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.

Newsletter

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...