கோவை காரமடை அருகே கல்குவாரியில் முறைகேடாக இயற்கை வளம் சுரண்டப்படுவதாக மாவட்ட ஆட்சியரிடம் வழக்கறிஞர் தொல்காப்பியன் புகார்!

கோவை: கோவை காரமடை அருகே உள்ள கல்குவாரியில் முறைகேடாக இயற்கை வளம் சுரண்டப்படுவதாக வழக்கறிஞர் தொல்காப்பியன் கோவை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் அளித்துள்ளார்.


கோவை: கோவை காரமடை அருகே உள்ள கல்குவாரியில் முறைகேடாக இயற்கை வளம் சுரண்டப்படுவதாக வழக்கறிஞர் தொல்காப்பியன் கோவை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் அளித்துள்ளார்.

கோவையை சுற்றியுள்ள பகுதிகளில் அனுமதி இல்லாமல் ஆற்றுமணல் அள்ளப்படுவது, அனுமதி பெற்ற அளவிற்கு மீறி மணல் அள்ளுவது என நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் கோவையை சுற்றியுள்ள 300 -க்கும் மேற்பட்ட கல் குவாரி உரிமம் பெற்றவர்கள், கல்குவாரியில் வெடி வைத்து தகர்க்கப்பட்டு அதில் வரக்கூடிய ஜல்லி கற்கள், எம் சாண்ட் என்று சொல்லக்கூடிய வீடு கட்டக்கூடிய மண்கள் எடுத்து வருகின்றன.

இதில் கல் குவாரிகள் அரசிடம் அனுமதி பெற்ற அளவிற்கு மீறி சக்தி வாய்ந்த வெடி பொருட்களை பயன்படுத்தி அதிகப்படியான ஆழம் பாறைகளை குடைந்து, முறைகேடு நடந்திருப்பதாக பிரபல வழக்கறிஞர் தொல்காப்பியன் என்பவர் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் அவர்களிடம் மனு அளித்துள்ளார்.

பதிவுத் தபாலில் அவர் அனுப்பி உள்ள அந்த மனுவில், அவர்கள் முறைகேட்டில் ஈடுபடுவதற்கான கூகுள் மேப் படத்தையும் இணைத்துள்ளார். இதன் மீது உடனடியாக ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.



கோவை காரமடை அருகில் மங்கலக்கரைப்புதூர் என்னுமிடத்தில் கல்குவாரி மற்றும் கிராவல் மண் அனுமதி பெற்று Rough stone boulders, Size reduce stone, M.sand, P.sand and dust போன்றவற்றை எடுத்து முறைகேடாக கல்குவாரி நடத்துவதாக வழக்கறிஞர் தொல்காப்பியன் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.



மேலும், அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் அதிக ஆழம் சென்று மிகவும் சக்தி வாய்ந்த சுமார் நான்கு கிலோமீட்டர் அளவுக்கு அதிர்வு ஏற்பட கூடிய வேதிப் பொருட்களை பயன்படுத்தி வெடி தயாரித்து வெடித்து, கல் குவாரியில் இருந்து கல் மற்றும் மண் எடுத்து விற்பனை நடைபெறுவதாகவும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற சக்தி வாய்ந்த வெடி பொருட்களை பயன்படுத்துவதால் வெடித்து சிதறும்போது, அருகாமையில் உள்ள கிராம வீடுகள் வரை அந்த கற்கல் விழுகின்றன. அதிகப்படியான சத்தத்தால் செவித்திறன் இழக்கும் வாய்ப்பும் உள்ளது. இதன் மூலமாக மக்களும் பாதிப்படைகின்றன. படிக்கக்கூடிய மாணவ மாணவிகளுக்கும் இது மிகவும் இடையூறாக இருப்பதாக தெரிகிறது.



அதேபோல வரம்பு மீறி, முறைகேடாக செயல்படும் ப்ளூ மெட்டல் நிறுவனம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் குழு அமைத்து உண்மையை வெளியுலகுக்குக் கொண்டு வர வேண்டும் எனவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் வழக்கறிஞர் சுரண்டப்பட்ட இயற்கைவளம் குறித்த கூகுள் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

எந்த அளவிற்கு வரம்பு மீறப்பட்டுள்ளது, அரசுக்கு சொந்தமான கனிம வளங்கள் முறைகேடாக எவ்வளவு சுரண்டப்பட்டு உள்ளது என்பதை அந்த கூகுள் மேப் தெளிவாக விளக்குகிறது அதனால் உடனடியாக மாவட்ட நிர்வாகம் தனியாக ஒரு குழு அமைத்து முறைகேட்டில் ஈடுபட்டு வரும் கல் குவாரி அதிபர்கள் மீது விசாரணை நடத்தி ஆய்வு செய்து சட்டத்தின் முன்பாக நிறுத்தி அவருடைய கல்குவாரி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவில் கூறப்பட்டதை ஏற்றுக்கொண்ட, மாவட்ட ஆட்சியர் சமீரன் யார் தவறு செய்தாலும் அரசினுடைய கனிம வளத்தை யார் முறைகேடு செய்தாலும், முறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

Newsletter

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...