கோவை: கோவையில் சொத்து தகராறில் வீடு கட்டித்தர கேட்டு, குடிபோதையில் மகன் செய்த கொடூரம். தகப்பனாரை கத்திரிக்கோல் மற்றும் அரிவாளால் வெட்டிக் கொன்ற மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை: கோவையில் சொத்து தகராறில் வீடு கட்டித்தர கேட்டு, குடிபோதையில் தந்தையை கத்திரிக்கோலால் குத்திக் கொன்ற மகன் கைது செய்தனர்.
கோவையில் நள்ளிரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்த மகன் தன் தகப்பனாரிடம் சொந்தமாக வீடு வேண்டும் என சொத்து தகராறில் ஈடுபட்டுள்ளார். அதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஆத்திரமடைந்த மகன் குடிபோதையில் தான் செய்வது என்னவென்று அறியாமல் வீட்டிலிருந்த கத்தரிக்கோலை எடுத்து தகப்பனாருடைய கழுத்தில் குத்தி அரிவாளால் வெட்டி தந்தையை கொலை செய்த பயங்கரம் நடைபெற்றுள்ளது. செல்வபுரம் போலீசார் மகனை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கோவை செல்வபுரம் பகுதியை அடுத்த சொக்கம்புதூர் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (60), திமுக பிரமுகரான இவர் வாழைக்காய் கமிஷன் மண்டி நடத்திவந்தார்.
இவரது மகன் ராஜேஷ் என்ற கோவிந்தராஜன். ராஜேஷ் தந்தையின் வாழைக்காய் மண்டியில் பணி புரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். அனைவரும் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகிறார்கள்.
இதனிடையே, ராமச்சந்திரனுக்கும் அவரது மகன் ராஜேஷ் என்கிற கோவிந்தராஜனுக்கும் சொத்து பிரிப்பது தொடர்பாக தகராறு இருந்து வந்தது. கடந்த சில மாதங்களாக தனியாக வீடு வாங்கித்தர சொல்லி தந்தையிடம் ராஜேஷ் தகராறு செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று இரவு கோவிந்தராஜன் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். அவரது தந்தையிடம் சொந்த வீடு வாங்கி தருமாறு மீண்டும் தகராறு செய்தார். அதற்கு அவர் மறுத்ததாக கூறப்படுகிறது.
அப்போது, அவர்கள் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கோவிந்தராஜன் வீட்டிலிருந்த கத்திரிக்கோலால் தந்தை ராமச்சந்திரனின் கழுத்தில் குத்தினார். மேலும், அரிவாளை எடுத்து சரமாரியாக தகப்பனாரை வெட்டியுள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த ராமச்சந்திரன் ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கீழே விழுந்தார். சிறிது நேரத்தில் ராமச்சந்திரன் துடிதுடித்து அதே இடத்தில் இறந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த செல்வபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தொடர்ந்து ராமச்சந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் தந்தை ராமச்சந்திரனை கத்திரிக்கோலால் குத்திக் கொலை செய்த மகன் ராஜேஷ் என்கிற கோவிந்தராஜனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகனே அப்பாவை கொலை செய்த சம்பவம் செல்வபுரம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், அவரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.