முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணியின் வங்கி கணக்குகள் அனைத்தும் முடக்கம் - லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை!

கோவை: முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணியின் வங்கி கணக்குகள் அனைத்தும் முடக்கம் செய்து லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.


கோவை: முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணியின் வங்கி கணக்குகள் அனைத்தும் முடக்கம் செய்து லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த இரண்டு நாட்களாக எஸ். பி. வேலுமணி வீடு உட்பட தமிழகத்தில் உள்ள 52க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைகள் மேற்கொண்டனர்.

தொடர்ந்து 12 மணி நேரம் அவர் சென்னையில் தங்கியிருந்த எம்.எல்.ஏ., விடுதியிலும் அவரிடம் நேரடி விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையின் முடிவில் பல்வேறு ஆவணங்கள் கிடைத்து இருப்பதாக கூறி இருந்தனர்.

அதேபோல, சோதனையில் கணக்கில் வராத ரூ.13 லட்சம் ரொக்கப் பணம், ரூ.2 கோடி மதிப்பிலான ஆவணங்கள், கணினிகள், ஹார்ட் டிஸ்க்குகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறையினா் தெரிவித்தனர்.

இந்த நிலையில், லஞ்ச ஒழிப்பு போலீசார் தற்போது முன்னாள் அமைச்சர் வேலுமணியின் வங்கி கணக்குகளை முடக்கி உள்ளனர்.

மேலும், பறிமுதல் செய்த சொத்து ஆவணங்களை ஆய்வு செய்யும் பணியில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...