கோவையில் நேற்று ஒரே நாளில் 10,950 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுள்ளது.

கோவை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 2,500 பேருக்கு கோவேக்சினும், ஊரகப் பகுதிகளில் 8,450 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 2,500 பேருக்கு கோவேக்சினும், ஊரகப் பகுதிகளில் 8,450 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் பொதுமக்கள் ஆர்வமுடன் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி வருகின்றனர். தடுப்பூசிகள் இருப்புக்கு ஏற்ற வகையில், ஊரக மற்றும் மாநகராட்சி பகுதிகளில் அவ்வப்போது தடுப்பூசிகள்போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று மாநகராட்சி பகுதியில் கோவேக்சின் 2-வது தவணை தடுப்பூசி போடப்பட்டது. இதற்காக, காலை 8 மணிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு 9 மணிக்கு பொதுமக்களுக்கு டோக்கன் விநியோகிக்கப்பட்டன. இதை தொடர்ந்து 10 மணி முதல் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கின.

இதன்படி, கவுண்டம்பாளையம், ராமநாதபுரம், கணபதி உள்பட 10 மையங்களில் தலா 250 வீதம் 2,500 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. முன்னதாக, கோவேக்சின் முதல் தவணை போட வந்தவர்களுக்கு தடுப்பூசி போடப்படவில்லை, அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இதேபோல், நேற்று கோவை மாவட்டத்தில் காரமடை, அன்னூர், பெரியநாயக்கன்பாளையம், தொண்டாமுத்தூர், மதுக்கரை, சூலூர் உள்ளிட்ட பகுதிகளில் 45 இடங்களில் 8,450 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில், பொது மக்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்து நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

Newsletter

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...