ஜவுளித் தொழிலை ஒழுங்குபடுத்த ஆணையம் அமைக்க வேண்டும்-கிணத்துக்கடவில் நடைபெற்ற பாஜக நெசவாளர் பிரிவு செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்!!

கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு கோவை சாலை செக்போஸ்ட் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் கோவை தெற்கு மாவட்ட பாஜக நெசவாளர் பிரிவு சார்பில் தேசிய கைத்தறி தின விழாவும், மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று மாலை நடைபெற்றது.


கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு கோவை சாலை செக்போஸ்ட் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் கோவை தெற்கு மாவட்ட பாஜக நெசவாளர் பிரிவு சார்பில் தேசிய கைத்தறி தின விழாவும், மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று மாலை நடைபெற்றது.



மாவட்ட நெசவாளர் பிரிவுத் தலைவர் அருள் சந்திரசேகர் தலைமையில், நடைபெற்ற கூட்டத்தில், தெற்கு மாவட்ட நெசவாளர் பிரிவைச் சேர்ந்த நிர்வாகிகளும், உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

முன்னதாக தேசிய நெசவாளர் தினத்தை முன்னிட்டு நெசவாளர்களுக்குப் பொன்னாடை போர்த்தி இனிப்புகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

கைத்தறி மற்றும் விசைத்தறி தொழிலாளர்களுக்கு மத்திய அரசின் சலுகைகள் கிடைக்கத் தனி கூட்டுறவுச் சங்கம் ஏற்படுத்த வேண்டும்.

நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் புடவை மற்றும் பட்டாடை ரகங்களுக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும்.

நூல் விலை ஏற்றம் இறக்கம் இல்லாத சீரான விலை நிர்ணயம் செய்து ஜவுளித் தொழிலை ஒழுங்குபடுத்த ஆணையம் அமைக்க வேண்டும்.

மூத்த கைத்தறி நெசவாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.



மாநில நெசவாளர் பிரிவு செயலாளர் நாராயணன், மாவட்ட பாஜக தலைவர் வசந்த ராஜன், பொன்இளங்கோ, கணேசமூர்த்தி, மண்டலத் தலைவர் கிருஷ்ணசாமி, மண்டல நெசவாளர் பிரிவு தலைவர் அருண்குமார் உள்ளிட்ட நெசவாளர்கள், மாவட்ட, மண்டல, நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...