கோவை பீளமேடு பகுதியில் தொடரும் திருட்டு சம்பவம்... மருத்துவக் கல்லூரி பேராசிரியர் வீட்டில் தங்க நகை வெள்ளிப் பொருட்கள் கொள்ளை..!

கோவை: கோவை பீளமேடு பகுதியில் தொடரும் திருட்டு சம்பவத்தால், அப்பகுதியில் அச்சம் நிலவுகிறது. மருத்துவக் கல்லூரி பேராசிரியர் வீட்டை உடைத்து, கொள்ளையர்கள் வீட்டிலிருந்த தங்க நகை மற்றும் வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.


கோவை: கோவை பீளமேடு பகுதியில் தொடரும் திருட்டு சம்பவத்தால், அப்பகுதியில் அச்சம் நிலவுகிறது. மருத்துவக் கல்லூரி பேராசிரியர் வீட்டை உடைத்து, கொள்ளையர்கள் வீட்டிலிருந்த தங்க நகை மற்றும் வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

கோவை பீளமேடு பகுதியில் தொடர்ந்து வீடுகளை உடைத்து திருடும் சம்பவம் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், மருத்துவக் கல்லூரி பேராசிரியருடைய வீட்டை உடைத்து. உள்ளே சென்று தங்க நகை, வெள்ளிப் பொருட்களைக் கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். தொடர்ந்து நிகழும் இந்த திருட்டு சம்பவத்தால், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது...

‘‘கோவை பீளமேடு சேரன் மாநகரில் உள்ள குமுதம் நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(45). இவர் கடந்த நான்கு மாதங்களாக மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறார். கோவை மருத்துவக் கல்லூரியில் சீனியர் உதவி பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

இவர் கடந்த ஐந்தாம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு, மகள் கல்லூரி சேர்க்கை தொடர்பாக குடும்பத்துடன் அகமதாபாத் சென்றுவிட்டார்.

நேற்று வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 14 பவுன் நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்கள் திருடு போயிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து, செந்தில்குமார் பீளமேடு குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...