கோவை: கோவையில் கடந்த ஆண்டு இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கில் கைதாகி, தற்போது ஜாமினில் வெளிவந்த வாலிபரை மூன்று பேர் கொண்ட கும்பல் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றனர். தலைமறைவான அந்த மூவரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

கோவை காட்டூர் ராம் நகரில் கடந்த ஆண்டு இந்து முன்னணி பிரமுகர் பிஜு என்பவர் அவரது ஜூஸ் கடை முன்பு மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதில், ரத்தினபுரி சங்கனூர், காந்தி நகரைச் சேர்ந்த அருண்குமார் வயது 32, உட்பட சிலர் கைது செய்யப்பட்டனர்.
தற்போது, அருண்குமார் ஜாமினில் வெளி வந்துள்ளார். இந்தநிலையில், நேற்று அவர் கோவை பாப்பநாயக்கன் பாளையம் ஜெயசிம்மாபுரத்தில் உள்ள தனது நண்பர் சிவகுமார் என்பவரை சந்திப்பதற்காகச் சென்றார்.
அப்போது இருவரும் அவர்கள் வீட்டருகே நின்று கொண்டு பேசிக் கொண்டிருந்தனர். அந்தநேரத்தில் அங்கு வந்த மூன்று பேர் அருண்குமாரிடம் தகராறு செய்தனர். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஆனது.
இதில், ஆத்திரம் அடைந்த மூன்று பேரும் சேர்ந்து அருண்குமாரை கத்தியால் குத்தினர். இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர்.
இதைப் பார்த்த மூன்று பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து அளித்த புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீஸார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் கோவையைச் சேர்ந்த மோசஸ் உட்பட மூன்று பேர் அவரை கத்தியால் குத்தியது தெரிய வந்தது. தொடர்ந்து, தலைமறைவான அந்த மூன்று பேரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.