கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள கோவையில் உள்ள 112 தனியார் மருத்துவமனைகளில் இலவச மருத்துவ காப்பீட்டு திட்டம்-தமிழக முதன்மை செயலாளர் சித்திக் தகவல்.!!

கோவை: கோவை மாவட்டத்தில் 3-வது அலையை எதிர்கொள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் காப்பீட்டுத் திட்டம் தமிழக முதன்மை செயலாளர் சித்திக் மேட்டுப்பாளையத்தில் தெரிவித்துள்ளார்.



கோவை: கோவை மாவட்டத்தில் 3-வது அலையை எதிர்கொள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் காப்பீட்டுத் திட்டம் தமிழக முதன்மை செயலாளர் சித்திக் மேட்டுப்பாளையத்தில் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் வணிகவரித்துறை ஆணையரும், கோவை கண்காணிப்புத்துறை அலுவலரும், தமிழக அரசின் முதன்மை செயலாளருமான சித்திக் ஐ.ஏ.எஸ் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது கொரோனா 3-வது அலையினை எதிர்கொள்ளும் வகையில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மருத்துவமனை மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

பின்னர், அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் இருப்பு, தேவையான வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய சித்திக் கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை 6,92,249 குடும்பங்களுக்குத் தமிழக முதல்வரின் விரிவான காப்பீட்டுத்திட்ட அட்டை உள்ளது.

காப்பீட்டுத்திட்ட அட்டை உள்ளவர்களுக்கு இலவசமாக கொரோனா சிகிச்சையளிக்கும் வகையில் 48 நிரந்தர மற்றும் 64 தற்காலிக மருத்துவமனைகள் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் சிகிச்சையளிக்க பதிவு செய்துள்ளன.

இம்மருத்துவமனைகள் முதல்வரின் விரிவான காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் சிகிச்சையளிக்க தயார் நிலையில் உள்ளதாகவும், தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெற விரும்புவோர் 1800 425 3993 என்ற கட்டணமில்லா எண்ணைத் தொடர்பு கொண்டு மருத்துவமனைகளில் உள்ள காலியிடங்கள் குறித்துக் கேட்டுத்தெரிந்து கொள்வதோடு, சிகிச்சைக்கும் ஏற்பாடு செய்வார்கள் என்று கூறினார்.

கடந்த கொரோனா 2 வது அலையின் போது 1874 கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க சுமார் 21 கோடி ரூபாய் தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், 3 வது அலை குழந்தைகளை அதிகளவில் தாக்குமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த சித்திக் கடந்த கொரோனா 2 அலையின் போது இருந்த டெல்டா வைரஸ் அதே வகையிலேயே உள்ளது.

உருமாற்றம் இல்லை, இதனால் பயப்பட வேண்டியதில்லை எனவும், பொதுமக்கள் இன்னும் கூடுதல் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் எனவும் தெரிவித்தார்.

ஆய்வின் போது சுகாதாரத்துறை இணை இயக்குநர் சந்திரா, துணை இயக்குநர் அருணா, காரமடை வட்டார மருத்துவ அலுவலர் சுதாகர், சுகாதார மேற்பார்வையாளர் சண்முகசுந்தரம், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் கண்ணன், வட்டாட்சியர் ஷர்மிளா, நகராட்சி ஆணையர் வினோத், பொறியாளர் கவிதா, சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

Newsletter

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...