கோவை: கேரள முதலமைச்சர் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த முன்னாள் விமானப்படை அதிகாரியை காவல்துறை கைது செய்தனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் மற்றும் கேரள முதலமைச்சர் செல்போனில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து காவல்துறை ஆணையர் நஜ்மல் ஹோட வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரைப் பிடிக்க சைபர்கிரைம் காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை ஆட்சியர் கேரள முதலமைச்சர் ஆகியோரின் செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு எனக்குக் கடன் பிரச்சினை உள்ளது.
இதைத் தீர்க்க ஒருவரை மீடியேட்டர் ஆக நியமிக்க வேண்டும். இல்லை என்றால் கேரளா ரயில் நிலையம் உள்ளிட்ட சில இடங்களில் குண்டு வெடிக்கும் என்று பேசி விட்டு இணைப்பைத் துண்டித்துள்ளார்.
அந்த செல்போன் எண் மற்றும்சேலத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த செல் எண் ஒன்று என்று காவல்துறைக்குத் தெரியவந்தது.
இதையடுத்து காவல்துறை விசாரணை நடத்தியபோது சேலத்திலிருந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து காவல்துறை நடத்திய விசாரணையில் அந்த செல்போன் எண் மாமாங்கத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் பகுதியிலிருந்ததை காவல்துறை கண்டுபிடித்தனர். இதைத் தொடர்ந்து காவல்துறை அங்குச் சென்று அந்த செல்போன் எண்ணை வைத்து அந்த நபரைப் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பிரேம்ராஜ் நாயர் 46. என்பதும் அவர் தான் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.
இதையடுத்து காவல்துறை அவரை கைது செய்தனர்.
இது குறித்து காவல்துறை கூறும்போது:-
வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பிரேம் ராஜ் நாயர் நேற்று முன்தினம் சேலம் ஜங்ஷன் முல்லை நகர்ப் பகுதியில் உள்ள ஒரு கடையில் செல்போனுக்கு ரீசார்ஜ் செய்துள்ளார்.
இதையடுத்து செல்போன் கோபுரம் மூலம் கண்காணித்து அவர் மாமாங்கம் பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கி இருப்பது தெரியவந்ததை அடுத்து நாங்கள் அவரை கைது செய்துள்ளோம் எனக் கூறினார்.தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிகிறது.