கோவை: கோவை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ளும் முன் களப்பணியாளர்கள் தங்கள் பணிகளைச் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., கேட்டுக்கொண்டுள்ளார்.

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல பகுதிகளில் கொரோனா தடுப்புப் பணிகளை மேற்கொள்ளும் முன் களப்பணியாளர்களின் பணிகள் குறித்தும் அவர்களுக்கான அறிவுரைகளை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ரஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., வழங்கியும், கவுண்டம்பாளையம், வடவள்ளி கூட்டுக்குடிநீர் திட்டம், நார உந்து நிலையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் ஆர்.எஸ்.புரம் மல்டிலெவல் கார்பார்க்கிங் கட்டப்பட்டு வரும் பணிகள் நடைபெற்றுவருவதை இன்று (11.08.2021) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.9க்குட்பட்ட கவுண்டம்பாளையம் சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆணையாளர், கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ளும் முன் களப்பணியாளர்களிடம் ஆணையாளர் தெரிவிக்கையில்,
வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்குச் சளி, காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல், உடல் சோர்வு, உடல் வெப்பநிலை பரிசோதனை, ஆக்சிஜன் அளவு, கண்டறியும் பணிகளை மேற்கொள்ளும்போது, அதன் விபரங்களை கோவிட்-19 கள ஆய்வு பதிவேடுகளில் பதிவு செய்யும்போது, பதிவு செய்யப்பட்டவர்களில் சளி, காய்ச்சல் உள்ளவர்களைக் கண்டறிந்து, கொரோனா பரிசோதனை செய்ததில் அவர்களுக்கு கொரோனா தொற்று (positive) உறுதிசெய்யப்பட்டால், உடனடியாக கொரோனா கட்டுப்பாட்டறை மற்றும் சுகாதார அலுவலர்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.
பணி மேற்கொள்ளும்போது முகக்கவசம் அணிந்து பணியாற்ற வேண்டும், கிருமிநாசினி கொண்டு கைகளைச் சுத்தப்படுத்த வேண்டும், தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும், தங்களுடைய பணிகளைச் சிறப்பாகச் செய்து கொரோனா தடுப்புப்பணிகளில் மேற்கொள்ள வேண்டும் என ஆணையாளர் தெரிவித்தார்.
பின்னர், கொசுவினால் ஏற்படும் நோய்களைத் தவிர்ப்பதற்காகப் பொதுமக்களிடம் வீடுகளில் உபயோகமற்ற பொருட்கள் இருந்தால் அவற்றை உடனடியாக அகற்றிட வேண்டும். வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டிகளைக் கொசுக்கள் மற்றும் கொசுப்புழு புகாவண்ணம் மூடி வைக்க வேண்டும் என்பதையும், கொசுவினால் ஏற்படும் நோய்களைக் குறித்தும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும் என தெரிவித்தார்.

அதனைத் தொடாந்து, வார்டு எண்.8ல், கோவை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட கவுண்டம்பாளையம் வடவள்ளி மற்றும் வீரகேரளம் ஆகிய பகுதிகளுக்கான குடிநீர் அபிவிருத்திக்கான நீர் உந்து நிலையத்தில் குடிநீர் விநியோகப்பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

அதனைத் தொடர்ந்து, சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் மேற்கு மண்டலத்திற்குட்பட்ட செல்வம் பதி, குமாரசாமி குளங்கள் புனரமைக்கும் பணிகள் நடைபெற்றுவருவதையும், திவான்பகதூர் சாலையில் 80 சதவீதம் பணிகள் முடிவுற்ற நிலையில், மல்டி லெவல் கார் பார்க்கிங் கட்டப்பட்டுவரும் பணிகள் நடைபெற்றுவருவதைப் பார்வையிட்ட ஆணையாளர் மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்.
இந்த ஆய்வின்போது, மேற்கு மண்டல உதவி ஆணையாளர் ஆர்.சுந்தாராஜன், மண்டல சுகாதார அலுவலர் சண்முகநாதன், உதவிப் பொறியாளர் விமல், பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.