வால்பாறையில் சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி பல்வேறு நலத்திட்டம்... பொருட்கள் வழங்கினார்..!

கோவை: வால்பாறையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி அரசு மருத்துவமனைக்கு புதிதாக ஆம்புலன்ஸ் சேவையைத் தொடங்கி வைத்தார். மேலும், கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு உதவிகள் மற்றும் பொருட்கள் வழங்கினார்.


கோவை: வால்பாறையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி அரசு மருத்துவமனைக்கு புதிதாக ஆம்புலன்ஸ் சேவையைத் தொடங்கி வைத்தார். மேலும், கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு உதவிகள் மற்றும் பொருட்கள் வழங்கினார்.



கோவை மாவட்டம் வால்பாறையில் அதிமுக சட்ட மன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்தார்.



வால்பாறை காந்தி சிலை பகுதியில் நடைபெற்ற நிகழ்வில், வால்பாறை அரசு மருத்துவமனைக்கு 20 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் வெண்டிலட்டர் பொருத்திய அவசர ஊர்தி வாகனத்தை வால்பாறை சுகாதார மருத்துவர் பாபு லட்சுமணன் அவர்களிடம் வழங்கினார். கொரோனா பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு காலங்களில் பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள், கட்டடத் தொழிலாளர்கள், தையல் தொழிலாளர்கள் சுமார் 500 பேர்கள் மற்றும் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் 110 பேர்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்கள் ஐந்து கிலோ அரிசி, வீட்டுக்குத் தேவையான காய்கறிகள் அனைத்தும் வழங்கப்பட்டது.

மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கருமலை எஸ்டேட் பகுதியில் தோட்டத் தொழிலாளர்கள் ஆறு பேர் வீடு மின் கசிவால் தீப்பிடித்து எரிந்து வீட்டில் உள்ள அனைத்து பொருட்களும் சேதம் அடைந்தன. அவர்களுக்கு கட்டில், பீரோ ஆகியவைகள் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி வழங்கினார்.

இந்நிகழ்வில் வால்பாறை அதிமுக நகர செயலாளர் மயில் கணேசன், கூட்டுறவு வங்கித் தலைவர் அமீது, பொன் கணேசன், செந்தில், சௌந்தரராஜ், சலாவுதீன் மற்றும் அதிமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...