கோவை: வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி சார்பில் புதிய ஆம்புலன்ஸ் வாகனம் துவக்க விழா நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதி உறுப்பினராக வெற்றி பெற்றவர் அதிமுகவைச் சேர்ந்த அமுல் கந்தசாமி. இவர் தேர்தல் பிரச்சாரத்தின் போது வால்பாறை மக்களின் அவசர உதவிக்காக ஆக்சிசன் வசதியுடன் கூடிய ஒரு ஆம்புலன்ஸ் வாகனத்தை தனது சொந்த செலவில் வாங்கி வழங்குவதாக அறிவித்து இருந்தார்.
இந்நிலையில், தேர்தலில் வெற்றி பெற்றவுடன் தான் கூறிய வாக்குறுதிப்படி புதிய ஆம்புலன்ஸ் வாகனத்தை வாங்கி, அதில் ஆக்ஸிஜன் சிலிண்டர் மற்றும் அத்தியாவசிய கருவிகள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், பணிகள் நடைபெற்று வாகனம் இன்று கிடைக்கப்பெற்றது. இதைத்தொடர்ந்து, ஆம்புலன்ஸ் வாகனத்தின் துவக்க விழா இன்று வால்பாறை காந்தி சிலை வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் புதிய ஆம்புலன்ஸ் வாகனத்தை வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து சக்கர நாற்காலியை வால்பாறை அரசு மருத்துவமனைக்கு மருத்துவரிடம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் வால்பாறை நகர செயலாளர் மயில் கணேசன், கூட்டுறவு நகர வங்கி தலைவர் வால்பாறை வீ அமீது, சலாவுதீன், வழக்கறிஞர் ஆர் ஆர் பெருமாள், எஸ் கே எஸ் பாலு, பொன் கணேஷ் உட்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.