கோவை: திருப்பூரில் 40 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் இருப்பிடத்தை தனியாருக்கு வழங்க அளவீடு செய்ய வந்த வருவாய் துறையினருக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: திருப்பூரில் 40 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் இருப்பிடத்தை தனியாருக்கு வழங்குவதற்காக அளவீடு செய்ய வந்த வருவாய் துறையினருக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயபுரம் அணைமேடு பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர்.
கடந்த 2010ம் ஆண்டு திருப்பூர் கோட்ட வருவாய் அலுவலர் நீண்டகாலமாக வசித்து வந்ததால் பொதுமக்கள் அவ்விடத்திலேயே தங்க அனுமதித்த சூழ்நிலையில், அவ்விடம் தனியாருக்கு சொந்தமென முத்துசாமி என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்த நிலையில் 2019-ம் ஆண்டு முத்துசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு அமைந்தது.
இந்நிலையில், வருவாய் துறையினர் நிலத்தை அளந்து முத்துசாமிக்கு வழங்க வேண்டிய சூழ்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அளவீடு செய்யும் பணி நடைபெறுவதால் மீண்டும் நீதிமன்றத்தை நாடிய நிலையில், வருவாய் துறையினர் உடனடியாக நிலத்தை அளவீடு செய்து முத்துசாமிக்கு ஒப்படைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

இதனையடுத்து, அளவீடு செய்ய சென்ற வருவாய் துறையினரை முற்றுகையிட்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர், 2019 திருப்பூர் கோட்ட வருவாய் அலுவலர் பொது மக்களுக்கு அளித்த உத்தரவாதத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாமல் இருந்ததால் தீர்ப்பு முத்துசாமிக்கு ஆதரவாக வந்திருப்பதாகவும் இது குறித்து மேல்முறையீடு செய்ய இருப்பதால் தற்போது நில அளவீடு செய்யும் பணி நடைபெறக் கூடாது எனவும் அவ்விடத்தில் பொது மக்கள் வசிக்க பாதுகாப்பு வழங்க வேண்டும் என பொது மக்களின் போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார்.
இதனையடுத்து, பொதுமக்களின் போராட்டத்தால் நில அளவீடு செய்யும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.