கோவை மதுக்கரை அருகே காட்டுக்குள் வடமாநில வாலிபர் படுகாயங்களுடன் சடலமாக மீட்பு - போலீசார் விசாரணை!

கோவை: கோவை மதுக்கரை அருகே காட்டுக்குள் வடமாநில வாலிபர் படுகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை மதுக்கரை அருகே காட்டுக்குள் வடமாநில வாலிபர் படுகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ஆஷீகுமார் (21). இவர் கோவை மதுக்கரை அடுத்த சீராபாளையம் பகுதியில் உள்ள தனியார் செருப்பு கம்பெனியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் கொரோனா நோய் பரவல் காரணமாக கம்பெனியில் வேலை செய்த வெளிமாநிலத்தவர்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு சென்றனர். அப்போது ஆஷீகுமார் அவரது சொந்த ஊருக்குச் சென்று விட்டார்.

பின்னர், மீண்டும் கடந்த 19-ந் தேதி பீகாரில் இருந்து புறப்பட்டு கோவை திரும்பினார். வழக்கம் போல கம்பெனிக்கு வேலைக்கு சென்று வந்தார். கடந்த 3 நாட்களாக இவர் கம்பெனிக்கு வேலைக்கு செல்லாம் இருந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில், இன்று காலை அங்குள்ள தனியார் கல்லூரி பின்புறம் உள்ள காட்டு பகுதியில் சென்றவர்கள், ஒருவர் இறந்து கிடப்பதாக மதுக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.



இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்து கிடந்தது செருப்பு கம்பெனியில் வேலை செய்து வந்த ஆஷுகுமார் என்பது தெரியவந்தது.

மேலும், ஆஷீகுமார் இறந்து கிடந்த இடத்தில் இடுப்பு பெல்ட் ஒன்று கிடந்தது. இதையடுத்து, போலீசார் அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆஷீகுமார் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...