கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 320 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்து வட்ட வழங்கல் அலுவலர் நடவடிக்கை மேற்கொண்டார்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே தமிழக - கேரள எல்லைப் பகுதியான வீரப்ப கவுண்டனூர் உள்ளிட்ட பகுதிகள் வழியாக தமிழகத்தில் விநியோகிக்கபடும் விலையில்லா ரேசன் அரிசியை பொதுமக்களிடம் இருந்து வாங்கி மூட்டைகளாக கட்டி இருசக்கர வாகனத்தில் கேரளாவுக்கு கடத்தப்பட்டு வருவதாக கிணத்துக்கடவு வட்ட வழங்கல் அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது
இந்த நிலையில், இன்று காலை வீரப்பகவுண்டனூரில் வட்ட வழங்கல் அலுவலர் முத்து மற்றும் ஊழியர்கள் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக மூன்று மூட்டைகளுடன் இருசக்கர வாகனத்தில் வந்த நபரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது, அந்த மூட்டைகளில் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, வாகனத்தை ஓட்டி வந்த நபர் இருசக்கர வாகனத்தையும், அரிசி மூட்டைகளையும் விட்டு விட்டு தப்பி ஓடி விட்டார்.

பின்னர், மூன்று மூட்டைகளில் இருந்த 320 கிலோ ரேஷன் அரிசி மற்றும் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்த வட்ட வழங்கல் அலுவலர் முத்து, ரேசன் அரிசி கொண்டு வந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.