கோவை: ரயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக பெட்டிகள் இணைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொள்ளாச்சி ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு, மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்தின் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு மறுக்கப்படும் சலுகைகளை, மத்திய அரசு உடனடியாக வழங்க வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, மாற்றுத்திறனாளிகள் ரயில்களில் ஏறி இறங்குவதற்கு வசதியாக எக்ஸ்லேட்டர் நடைபாதை ஏற்படுத்த வேண்டும், பிளாட்பார கட்டணத்தை குறைக்க வேண்டும், புதுச்சேரி, சண்டிகர் மாநிலங்களைப் போல மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் மானியம் வழங்க வேண்டும், ஐ நா சபையில் இந்தியா ஒத்துக்கொண்டு உள்ள சத்துக்கள் அனைத்தையும் செயல்படுத்த வேண்டும் என்றனர்.

மேலும், பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் முன்பதிவு ரசீது உள்ளிட்ட ஆவணங்கள் மலையாளம், ஆங்கில மொழியில் உள்ளது, இதை தமிழில் அச்சிட வேண்டும் என்றும் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்தனர்.