கோவை: எஸ்.பி.வேலுமணி இடம் விசாரணை நிறைவடைந்தது 2-கோடி வைப்பு நிதி ஆவணம் மாநகராட்சி தொடர்பான ஆவணங்கள் எடுத்துச் சென்றனர்.

சென்னையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் நடைபெற்று வந்த லஞ்ச ஒழிப்புத் துறையினரின் விசாரணை நிறைவடைந்தது.
தனக்கு நெருக்கமானவர்களுக்கு டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது.
வேலுமணிக்குச் சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் 13.08 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
ரூ.2 கோடிக்கு வைப்புத் தொகை ஆவணம், மாநகராட்சி தொடர்பான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வன்வட்டுகள் மற்றும் முறைகேடு செய்ததற்கான ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
கோவையில் 42-இடங்களிலும், சென்னையில் 16-இடங்களிலும் திண்டுக்கல், காஞ்சிபுரத்தில் தலா ஒரு இடத்திலும் சோதனை நடைபெற்றது.
அ.தி.மு.க ஆட்சியில் சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் ஒப்பந்தப்புள்ளி ஒதுக்கீட்டில் மிகப்பெரிய முறைகேடு நடந்து உள்ளதாகக் கூறி அப்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணிக்கு எதிராகப் புகார் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கோவை சுகுணா புரத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை முடித்துக் கிளம்பினர்.