எஸ்.பி.வேலுமணி வீட்டில் இருந்து பாதுகாப்பு பெட்டக சாவி தவிர ஒரு பைசா கூட கைப்பற்றப்படவில்லை - அதிமுக வழக்கறிஞர்

கோவை: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடு உள்ளிட்ட இடங்களில் இன்று காலை 6 மணி முதல் லஞ்ச ஒழிப்பு துறையினர் இன்று சோதனை மேற்கொண்டனர்.



கோவை: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடு உள்ளிட்ட இடங்களில் இன்று காலை 6 மணி முதல் லஞ்ச ஒழிப்பு துறையினர் இன்று சோதனை மேற்கொண்டனர்.

அதில், சென்னை, கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற சோதனை இன்று மாலை 5:30 மணிக்கு முடிவடைந்தது என புறநகர் அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தாமோதரன் தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து பேசிய அவர், முன்னாள் அமைச்சர் வேலுமணியின் வீட்டில் காலை 6.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை, லஞ்சஒழிப்பு துறையினர், ஜெயசீலன் தலைமையில் சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனை இன்று மாலை நிறைவடைந்தது.

இச்சோதனையில், முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் இருந்து பாதுகாப்பு பெட்டக சாவி மட்டும் கைப்பற்றப்பட்டது. பணம் மற்றும் பொருள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. மேலும், அதை உறுதி செய்து அதிகாரிகள் கையெழுத்திட்டு அறிக்கை அளித்துள்ளனர்.



அந்த அறிக்கையின் நகலைச் செய்தியாளர்கள் கேட்டபோது, அதை தற்போது கொடுக்க முடியாது என்று தெரிவித்தார் வழக்கறிஞர் தாமோதரன். அவர் பேசுகையில் எதையும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம் என்று கட்சி நிர்வாகிகள் கோஷமிட்டனர்.

Newsletter

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...