முன்னாள் அமைச்சர் வேலுமணி ரெய்டு விவகாரம்: கோவையின் முன்னாள் துணை மாநகராட்சி ஆணையர் மதுராந்தகி வீட்டில் சோதனை

கோவை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலையிலிருந்து சோதனை செய்து வருகின்றனர்.



கோவை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலையிலிருந்து சோதனை செய்து வருகின்றனர்.

சென்னையில் உள்ள எம்.எல்.ஏ. விடுதியில் அவரிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். இந்தநிலையில், வேலுமணியின் ஆதரவு பெற்று கோவையில் பணியாற்றி, தற்போது திருப்பூரில் மாவட்ட வருவாய் அதிகாரியாக பணியாற்றி வரும் மதுராந்தகி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை செய்து வருகின்றனர்.

திருப்பூரில் மாவட்ட வருவாய் அலுவலராகப் பணியாற்றி வரும் மதுராந்தகியின் தந்தையும் ஓய்வுபெற்ற வணிக வரித்துறை உதவி ஆணையருமான சதாசிவம்(60) என்பவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

தமிழக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சென்னை மாநகராட்சியில் ரூ.464 கோடி மற்றும் கோவை மாநகராட்யில் ரூ.347 கோடி மதிப்பிலான ஒப்பந்தப் பணிகளை தனக்கு நெருக்கமானவர்களுக்கு வழங்கியதில் முறைகேடு நிகழ்ந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டின்பேரில், கோவை, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்கள் உள்பட 50க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சின்னக்காம்பட்டி புதூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வணிக வரித்துறை உதவி ஆணையர் சதாசிவம்(60) என்பவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

இவரது மகள் மதுராந்தகி என்பவர், கோவை மாவட்டத்தில் வருவாய் கோட்டாட்சியராக பணிபுரிந்து, தற்போது திருப்பூரில் மாவட்ட வருவாய் அலுவலராக பணிபுரிந்து வருகிறார். என்பது குறிப்பிடத்தக்கது.

கரூர் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துணை கண்காணிப்பாளர் நடராஜன் தலைமையில் 10-க்கும் மேற்பட்டோர் காவலர்கள் செவ்வாய்க்கிழமை அதிகாலையிலேயே, சின்னக்காம்பட்டி புதூரில் உள்ள சதாசிவம் வீட்டிற்கு சென்று சோதனையை தொடங்கினர்.

அப்போது, சின்னக்காம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் வின்செண்ட் என்பவரை, சதாசிவம் வீட்டிற்கு லஞ்ச ஒழிப்புக் காவல்துறை அழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த திடீர் சோதனை ஒட்டன்சத்திரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...