லஞ்ச ஒழிப்பு போலீஸாரால் சொத்து குவிப்பு புகாரில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட 17 பேர்கள் முழுவிவரம்..!

கோவை: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான 52 இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்பு போலீஸாரால் சொத்து குவிப்பு புகாரில் சிக்கியுள்ள 17 பேர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது அவர்களைப் பற்றிய முழுவிவரம்.


கோவை: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான 52 இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்பு போலீஸாரால் சொத்து குவிப்பு புகாரில் சிக்கியுள்ள 17 பேர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது அவர்களைப் பற்றிய முழுவிவரம்.

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உட்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அறப்போர் இயக்கம் மற்றும் திமுகவின் ஆர்.எஸ்.பாரதி, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு 2018-ஆம் ஆண்டில் அனுப்பிய புகாரின் அடிப்படையில் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான 52 இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் ரெய்டு நடத்தினார்கள்.

வேலுமணி உட்பட அவர் தொடர்புடைய 17 பேர் மீது லஞ்ச ஒழிப்பு எஸ்.பி. கங்காதரன் குற்ற முறையீடு செய்து அதனடிப்படையில் புகார் சென்னை உயர்நீதி மன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அதை அடுத்து வேலுமணிக்கு சொந்தமான சென்னை, கோவை, திண்டுக்கல் மற்றும் காஞ்சிபுரத்தில் உள்ள 52 இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக 20 பக்க எஃப்.ஐ.ஆரில் 7 தனி நபர்கள் மீதும் 10 நிறுவனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அதன் விவரங்கள் வருமாறு:-

1. முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.

2. வேலுமணி சகோதரர் அன்பரசன் இவர் செந்தில் அண்ட் கோ, ஷேர் ஹோல்டர், ஸ்ரீ மகா கணபதி ஜுவல்லர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பார்ட்னராக உள்ளார்.

3. கேசிபி இன்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட்

4. கே.சந்திரபிரகாஷ் நிர்வாக இயக்குநர் கேசிபி இன்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட். இவர் பங்குதாரராக உள்ள ஆலயம் பவுண்டேஷன்ஸ் லிமிடெட், காண்ட்ராக்ட்ரான்க்ஸ். இன்பரா லிமிடெட், Cஇன் விக்டா மெடிடெக் லிமிடெட்,) கன்ஸ்டிரோமல் குட்ஸ் லிமிடெட், வைடூரிய ஹோட்டல்ஸ் (நிர்வாக இயக்குநர், மற்றும் பங்குதாரர்) ரத்னா லட்சுமி ஹோட்டல்ஸ் (நிர்வாக இயக்குநர் மற்றும் பங்குதாரர்) ஆலம் கோல்ட் டைமன்ஸ்.

5. சந்திரசேகர் நிர்வாக இயக்குநர் கேசிபி இன்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட் இவர் பங்குதாரராக உள்ள ஆலயம் பவுண்டேஷன்ஸ் லிமிடெட், (இன்விக்ட மெடி பெக் லிமிட்) கான்ஸ்டிரோமல் குட்ஸ் லிமிடெட், வைடூரியம் ஹோட்டல் நிர்வாக மற்றும் பங்குதாரர், ரத்னா லட்சுமி ஹோட்டல் (நிர்வாக இயக்குநர் மற்றும் பங்குதாரர்) ஆலம் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ், டூ லீவ்ஸ் மீடியா.

6. எஸ்.பி. பில்டர்ஸ் உரிமையாளர் முருகேசன்

7. ஜேசு ராபர்ட் ராஜா

8. தி ஏசு டெக் மெசினரி பிரைவேட் லிமிடெட்,

9. கான்ஸ்ட்ரானிக்ஸ் இன்ப்ரா லிமிடெட் (இன் விக்டா மெடிடெக் லிமிடெட்

10. கான்ஸ்டிரோமல் குட்ஸ்

11. ஸ்ரீ மஹாகணபதி ஜுவல்லர்ஸ் பிரைவேட் லிமிடெட்,

12. ஆலயம் பவுண்டேஷன் பிரைவேட் லிமிடெட்,

13. வைடூரிய ஹோட்டல்ஸ் பிரைவேட் லிமிடெட்

14. ரத்னா லட்சுமி ஹோட்டல்ஸ் பிரைவேட் லிமிடெட்,

15. ஆலம் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ்,

16. ஏ. ஆர். இஎஸ், பிஇ, இன்பரா பிரைவேம் லிமிடெட்,

17. சி.ஆர்.கன்ஸ்ட்ரக்சன் உரிமையாளர் ராஜன்

இந்த 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...