கோவை சிறுவாணி அணையின் நீர்மட்டம் 34.20-அடியாக உயர்வு.!!

கோவை: சிறுவாணி அணையின் நீர்மட்டம் 34.20-அடியாக உயர்ந்துள்ளது.


கோவை: சிறுவாணி அணையின் நீர்மட்டம் 34.20-அடியாக உயர்ந்துள்ளது.

கோவை மாநகராட்சியில் 26-வார்டுகள், நகரை ஒட்டியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் சிறுவாணி குடிநீர் நீராதாரமாக உள்ளது.

அணையிலிருந்து தினமும் குடிநீருக்காக 10-கோடி லிட்டர் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அணையின் நீர்மட்டமானது, படிப்படியாகக் குறைந்தது.

3-அடிக்கும் கீழே சென்றது. இந்நிலையில், தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளதால், கடந்த சில நாள்களாகச் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதன் காரணமாக அணைக்குச் செல்லும் முக்தியாறு, பட்டியலாற்றில் நீர்வரத்து அதிகரித்தது.

இதுகுறித்து, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், சிறுவாணி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் அன்மையில் பெய்த மழை காரணமாக அணையின் நீர்மட்டம் 34.20-அடியாக உயர்ந்துள்ளது. மாநகராட்சி சார்பாக 97-எம்.எல்.டி நீர் குடிநீருக்காக எடுக்கப்படுகிறது, என்றார்.

Newsletter

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...