படித்துக்கொண்டே பானிபூரி கடைக்கு வேலைக்கு சென்ற சிறுவனின் சைக்கிள் விபத்தில் சேதம்... புதிய சைக்கிள் வாங்கிக் கொடுத்து மாணவனை மகிழ்வித்த கோவை இன்ஸ்பெக்டர்..!

கோவை: படித்துக்கொண்டே குடும்பப் பொறுப்போடு பகுதி நேரமாக பானிபூரி கடையில் வேலை பார்த்து வந்த சிறுவன்.


கோவை: படித்துக்கொண்டே குடும்பப் பொறுப்போடு பகுதி நேரமாக பானிபூரி கடையில் வேலை பார்த்து வந்த சிறுவன்.

விபத்து ஏற்பட்டு சிறுவனின் சைக்கிள் சேதமடைந்தது. சிறுவனுக்கு புதிய சைக்கிள் வாங்கிக் கொடுத்து சர்ப்ரைஸ் கொடுத்த போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பொதுமக்கள் மத்தியில் பாராட்டு குவிகிறது.

கோவை தடாகம் சாலையில் உள்ள பால் கம்பெனி பகுதியைச் சேர்ந்த சிறுவன் சுபாஷ் சந்திரபோஸ். இவரது தந்தை ஆட்டோ ஓட்டி வரும் நிலையில், தாய் கூலி வேலைக்கு சென்று வருகிறார். மாநகராட்சி பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் சுபாஷ் சந்திர போஸ் பெற்றோரின் சுமையை குறைப்பதற்காக ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள பானிபூரி கடையில் தினசரி 100 ரூபாய் சம்பளத்திற்கு வேலை பார்த்து வருகிறார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் தனது நண்பனின் சைக்கிளில் வேலையை முடித்துக்கொண்டு இரவு வீட்டிற்கு திரும்பிச் சென்று கொண்டிருந்தபோது, சிறுவன் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தலையில் காயம் அடைந்த சிறுவன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் ஓட்டிச் சென்ற சைக்கிள் முற்றிலும் சேதமடைந்தது.

இந்தநிலையில், இந்த விபத்து தொடர்பாக கோவை மேற்கு போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் பிரதாப்சிங் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். விசாரணைக்காக சிறுவன் வசித்த பகுதிக்கு சென்ற போது, சிறுவன் சுபாஷ் சந்திரபோஸ் சைக்கிள் ஓட்டுவதில் ஆர்வம் கொண்டவர் என்பதும், சிறுவயதிலேயே குடும்ப சுமையை குறைப்பதற்காக பானிபூரி கடையில் வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது.

சிறுவனின் மீது பாசம் கொண்ட அந்தப் பகுதி மக்களே சிறுவனுக்கு சைக்கிள் வாங்கிக் கொடுக்க திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்தது. இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து அபாய கட்டத்தைத் தாண்டி, சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய சிறுவன் சுபாஷ் சந்திரபோஸை, கோவை மேற்கு போக்குவரத்து காவல் பிரிவு ஆய்வாளர் பிரதாப் சிங் நேரில் சென்று நலம் விசாரித்தார்.

பின்னர், சிறுவனை வெரைட்டி ஹால் பகுதிக்கு அழைத்து வந்த ஆய்வாளர் பிரதாப் சிங் தனது சொந்தப் பணம் 4800 ரூபாயில் புதிய சைக்கிள் ஒன்றை சிறுவன் சுபாஷ் சந்திரபோஸ்க்கு வாங்கிக் கொடுத்து சிறுவனின் சைக்கிள் கனவை நனவாக்கினார். இந்தச் சம்பவம் அப்பகுதியினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...