கோவை: விளாங்குறிச்சி சாலையில் அமைந்துள்ள சேரன்மாநகர் பகுதியில் மக்கள் தொகை கணிசமாக அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இப்பகுதியில் புதிதாக தபால் நிலையம் மற்றும் புதிய கட்டடத்தில் ரேஷன் கடை விரைவில் தொடங்க இருப்பதால் அப்பகுதி மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

கோவை விளாங்குறிச்சி சாலையில் அமைந்துள்ளது சேரன்மாநகர் அரசு போக்குவரத்து கழக அலுவலர்கள் குடியிருப்புப் பகுதி. இங்கு ஏ, பி, சி என மூன்று பிரிவுகளில் 568 வீடுகள் உள்ளன. தவிர, சேரன்மாநகர் சுற்றுப்புற பகுதிகளில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு ஒப்பிடுகையில் இப்பகுதியில் புதிதாக ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன, மக்கள் தொகையும் கணிசமாக அதிகரித்துள்ளது.

கோவை மாநகராட்சி 32வது வார்டுக்குட்பட்ட பகுதியான சேரன் மாநகரில் வசிக்கும் மக்கள் பயன்பெறும் வகையில் புதிதாக தபால் நிலையம் மற்றும் புதிய கட்டடத்தில் ரேஷன் கடை விரைவில் தொடங்கப்பட உள்ளன.

சேரன்மாநகர் வீட்டு உரிமையாளர்கள் மற்றும் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் சுந்தர்ராஜன் இதுகுறித்து கூறியதாவது: ‘‘சேரன் மாநகரில் தபால் நிலையம் அமைக்க வேண்டும் என மக்கள் பல நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், தற்பொழுது புதிதாக தபால் நிலையம் அமைக்கப்பட உள்ளது. முதல் பஸ் ஸ்டாப் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான கட்டடம் இருந்தது, அந்த இடத்தை தபால் நிலைய உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து இறுதி செய்தனர்.
இதையடுத்து, அந்தக் கட்டடம் புனரமைக்கப்பட்டு தற்போது தபால் நிலையம் அமைப்பதற்காக தயார் நிலையில் உள்ளது. இதுதவிர, கவுண்டம்பாளையம் தொகுதி முன்னாள் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ஆறுகுட்டி அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 18 லட்சம் ரூபாய் செலவில் ரேஷன் கடை அமைக்க புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. தவிர, ஏழு இலட்சம் ரூபாய் செலவில் ஆறாவது பஸ் ஸ்டாப் அருகே பயணியர் நிழற்குடை அமைக்கப்படுகிறது.
தற்பொழுது தபால் நிலையம் செல்ல வேண்டும் என்றால் விளாங்குறிச்சி, சரவணம்பட்டி, பீளமேடு உள்ளிட்ட தொலைவில் அமைந்துள்ள தபால் நிலையங்களுக்குத்தான் மக்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளது. புதிதாக தொடங்கப்பட உள்ள தபால் நிலையம், சேரன்மாநகர் மற்றும் சுற்றுப்புறங்களைச் சேர்ந்த மக்களுக்கு மிகுந்த பயனளிக்கும்.'' என்று அவர் கூறினார்.