கோவை: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவை: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது காவல்துறை வழக்குப்பதிவு அதில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் விவரம் வருமாறு:-
அமைச்சராக இருந்த வேலுமணி 2014 முதல் 2018 வரை மாநகராட்சி நிர்வாக துறையிலிருந்து மாநகராட்சி நிர்வாக துறையின் கீழ் சென்னை, கோவை மாநகராட்சி நிர்வாகம் வருகிறது. அந்த வகையில் சென்னை கோவை மாநகராட்சியில் விடப்பட்ட செண்டர்களில் பல்வேறு முறைகேடுகள் செய்யப்பட்டுள்ளன.
2014 முதல் 2018 வரை சென்னை மாநகராட்சியில் ரூ.464 கோடி டெண்டரும், கோவை மாநகராட்சியில் ரூபாய் 346 கோடி டெண்டரும் வழங்கப்பட்டுள்ளது.
இதில் முறைகேடுகள் நடந்திருக்கின்றன. டெண்டர் விடுவதில் வெளிப்படையாக இருப்பதற்காக சில சட்ட விதிமுறைகள் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
தமிழ்நாடு டெண்டர் சட்டம் 1998 தமிழ்நாடு டெண்டர் வெளிப்படை விதிகள் 2012 அடிப்படையில் டெண்டர் விடப்பட வேண்டும்.
ஆனால் அதில் அனைத்து விதிகளும் மீறப்படுகின்றன. முதலில் டெண்டர் அறிவிப்புகள் பத்திரிகைகள் அல்லது டெண்டர் அறிவிப்பு செய்தி தாள்களில் வெளியிடப்பட வேண்டும்.
அதன் பிறகே டெண்டர்கள் வரவழைக்கப்பட்டு தகுதியுள்ளவர்கள் குறைந்த தொகை கேட்டு அவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அதை தொழில்நுட்பக் குழு ஆய்வு செய்யும் அதன் பிறகுதான் டெண்டர் விடப்பட வேண்டும்.
ஆனால் அந்த விதிமுறை மீறப்பட்டு டெண்டர் கொடுக்கப்பட்டிருக்கிறது. டெண்டர் எடுத்த பல நிறுவனங்கள் வேலுமணி குடும்பத்தினருக்கு சொந்தமானது. மேலும் அவருக்கு வேண்டிய நிறுவனங்களுக்கு டெண்டர் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
பல நிறுவனங்கள் போலி பெயரிலேயே பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. வேலுமணியின் சகோதரர்களுக்குச் சொந்தமான செந்தில் அண்ட் கோ நிறுவனம் மற்றும் கோவையைச் சேர்ந்த பதிவு பெற்ற காண்ட்ராக்டர் ராஜன் ரத்தின சாமி ஆகியோரின் பெயரில் மட்டும் 2014 லிருந்து 2017 வரை 47 டெண்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த இரண்டு நிறுவனங்களும் ஒரே செல்போனை பயன்படுத்தி இருக்கிறார்கள். டெண்டருக்கு விண்ணப்பித்த பல நிறுவனங்கள் ஒரே கம்ப்யூட்டரில் இருந்து பதிவு செய்து அனுப்பப்பட்டிருக்கிறது. கோவையைச் சேர்ந்த பல நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.
கோவையில் 14 டெண்டர்கள் ஜேசிபி இன்ஜினியர் ராபர்ட் ராஜா ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதிலும் முறைகேடுகள் நடந்திருக்கின்றன.
முருகேசன் என்பவருக்குச் சொந்தமான எஸ்.பி பில்டர்ஸ் நிறுவனம் 131 டெண்டர்கள் எடுத்திருக்கிறது. அதில் உள்நோக்கம் இருக்கிறது. டெண்டர் விடப்பட்டு அதில் தவறு நடந்து இருப்பதாக இந்திய தணிக்கைத் துறையும் சுட்டிக்காட்டி இருக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.