கோவை: கோவையில் இன்று எஸ்.பி. வேலுமணிக்கு சொந்தமான 35 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.
கோவை: கோவையில் இன்று எஸ்.பி. வேலுமணிக்கு சொந்தமான 35 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.
இதில், கேசிபி இன்ஜினியர்ஸ் நிறுவனமும் அடங்கும். டெண்டர் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், அதன் நிர்வாக இயக்குனர் சந்திர பிரகாஷ், வீட்டிலும் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது வீட்டில் இருந்த சந்திர பிரகாஷக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, அவர் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.