கோவை: வால்பாறையில் கோவாக்சின் இரண்டாம் கட்ட தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த 6-ஆம் தேதி கொரானா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் கோவிஷீல்டு தடுப்பூசி மட்டுமே போடப்பட்டது.
இந்நிலையில், இன்று 10.08.2021 செவ்வாய்க்கிழமை வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மட்டும் ஆயிரத்து 200 நபர்களுக்கு கோவாக்சின் இரண்டாம் கட்டம் தடுப்பூசி போடப்பட்டது.
வால்பாறையில் உள்ள அனைத்து பகுதியில் உள்ள மக்கள் முதல் தடவை கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு இரண்டாம் தவணை போடப்பட்டது.
இதில் காலை மதியம் என்று இரண்டு பிரிவாகப் பிரிக்கப்பட்டு காலையில் 300-ஆண்களுக்கும் 300-பெண்களுக்கும் போடப்பட்டது.அதேபோல் மதியம் 300-ஆண்கள் 300-பெண்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி போடப்பட்டது.
காலை முதலே அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டு கூட்டம் இன்றி சமூக இடைவெளியுடன் தடுப்பூசி செலுத்திச் சென்றனர். இந்த முகாமில் வால்பாறை நகரம் மட்டுமின்றி தேயிலைத் தோட்ட பகுதியிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.