முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணிக்கு சொந்தமான சென்னை கோவை உட்பட 52 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை.
கோவை: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணியின் வீட்டில் இன்று அதிகாலையிலிருந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், சென்னையில் உள்ள அவருடைய உறவினர் வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது.
கோவையில் உள்ள எஸ்.பி.வேலுமணி வீட்டில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் காலை 6 மணி முதல் சோதனை செய்து வருகின்றனர். அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக வேலுமணி இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

சென்னை, கோவை, காஞ்சிபுரம் திண்டுக்கல் உட்பட எஸ் பி வேலுமணிக்கு சொந்தமான 52 இடங்களில் காலை முதலே சோதனை நடைபெற்று வருகிறது2014 முதல் 2018 வரை நடைபெற்ற டெண்டர் முறைகேடுகள் மற்றும் ஒப்பந்த புள்ளிகள் வழங்குவதற்கு பணம் பெற்றது போன்ற பல்வேறு முறைகேடுகள் குறித்தும் சோதனை நடைபெற்று வருகிறது.
திமுக எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது, அதிமுக அமைச்சர்கள் குறித்த ஊழல் பட்டியலை கவர்னரிடம் கொடுத்தனர். தேர்தல் வாக்குறுதியிலும் ஊழல் செய்துள்ள அனைவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அரசு ஒப்பந்தப்புள்ளி பணிகளை தருவதாகக் கூறி 1.25 கோடி ஏமாற்றியதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது பாதிக்கப்பட்ட கான்டிராக்டர் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையிலும் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை கோடம்பாக்கத்தில் வேலுமணிக்கு நெருக்கமான நபர் ஒருவருக்கு வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.
முன்னதாக, அதிமுக ஆட்சியின் போதே அமைச்சர்களின் ஊழல் பட்டியலை ஆளுநரிடம் அப்போதைய எதிர்க்கட்சி தலைவரும், தற்போதைய முதல்வருமான ஸ்டாலின் அளித்தார். அத்துடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.