கோவை: கோவை விமான நிலையத்தில் சார்ஜாவில் இருந்து வந்த பயணியிடம் 883.06 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 42.82 லட்சம் மதிப்புள்ள அந்த தங்கத்தை பறிமுதல் செய்து சுங்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

கோவை விமான நிலையத்தில் பாலைவன நாடுகள் என சொல்லக்கூடிய சார்ஜா, கத்தார், துபாய், மஸ்கட் போன்ற நாடுகளில் இருந்து தொடர்ந்து தங்கக் கட்டிகள் மற்றும் தங்க பிஸ்கட்டுகள் பல்வேறு விதமான வடிவங்களில் மறைத்து எடுத்து வரப்படுவது வழக்கமாக உள்ளது.
அதை சுங்க அதிகாரிகள் சோதனையின் போது அவர்களை பிடித்து நகைகளையும், தங்கத்தையும் மீட்டு வருகின்றனர்.
இதேபோல, இன்று அதிகாலை 3.50 மணி அளவில் சார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா ஜி. 9413 என்ற விமானம் கோவை விமான நிலையத்தை வந்தடைந்தது.
அப்பொழுது அதில் இருந்து பயணிகள் இறங்கி தன்னுடைய பொருட்களை எடுத்துக் கொண்டு வெளியேறிக் கொண்டிருந்தனர். டி.ஆர்.ஐ அதிகாரிகள், சுங்க துறையைச் சேர்ந்தவர்கள் பயணிகளை சோதனை செய்துகொண்டிருந்தனர்.
அப்பொழுது இராமசாமி சேகர், தருமா அருள் நேதாஜி என்கிற 2 பயணிகள் நடவடிக்கையில் மாற்றமாக காட்சி அளித்தனர்.
அதைத் தொடர்ந்து அவர்களை சுங்க அதிகாரிகள் சோதனை செய்த பொழுது அவர்களுடைய கீழ் ஆடைக்கு உள்ளே தங்கத்தை பேஸ்ட் போல் உருவாக்கி அதை மறைத்து வைத்து எடுத்து வந்தது தெரியவந்தது.
உடனடியாக டி.ஆர்.ஐ. அதிகாரிகள் பேஸ்ட்டில் இருந்து தங்கத்தை பிரித்து அதனுடைய மதிப்பு என்ன என்பதை ஆராய்ந்தனர். 883.06 கிராம் ஒரிஜினல் தங்கம் பிரித்தெடுக்கப்பட்டது.
அதன் இன்றைய மதிப்பு 42.82 லட்சமாகும். தொடர்ந்து சுங்க அதிகாரிகள் இரண்டு பேரையும் விசாரணை செய்து வருகின்றனர். இன்று அதிகாலை 42.82 - லட்சம் தங்கம் பேஸ்ட் வடிவில் கைப்பற்றியது கோவை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.