கோவையில் மூன்றாம் கொரோனா அலையால் அதிகளவு பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு - கொரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலர் தகவல்

கோவை: கோவை மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மாவட்ட கொரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலரும், வணிக வரித்துறை ஆணையருமான சித்திக் இன்று ஆய்வு மேற்கொண்டார். இதன் பின்னர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு அமைப்பினருடன் ஆலோசனை நடத்தினார்.



கோவை: கோவை மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மாவட்ட கொரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலரும், வணிக வரித்துறை ஆணையருமான சித்திக் இன்று ஆய்வு மேற்கொண்டார். இதன் பின்னர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு அமைப்பினருடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்:

கோவை மாவட்டத்தில் சராசரியாக 200 புதிய நபர்கள் கொரோனா தொற்றால் தினசரி பாதிக்கப்பட்டு வருகின்றனர் கோவையில் மக்களுக்கு கொரொனா எதிர்ப்பு சக்தி (sero-surveillance) 43 சதவீதமாக இருக்கின்றது எனவும், அதுவே, சென்னையில் கொரோனா எதிர்ப்பு சக்தி 78 சதவீதமாக இருக்கின்றது.



எதிர்ப்பு சக்தி வெறும் 43 சதவீதமாக மட்டுமே இருப்பதால், கோவையில் மூன்றாம் அலையால் அதிகளவு பாதிப்பு இருக்க வாய்பபுண்டு எனவும், இதை எதிர்கொள்ள தயாராக இருக்கவேண்டும். இன்னும், ஒரு மாதத்திற்குள் கூட 3 வது அலை வர வாய்ப்புண்டு.

மக்கள் முக கவசத்தை கட்டாயம் அணிய வேண்டும், தேவையற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும் என தெரிவித்த அவர், தற்போது

முழு ஊரடங்கு இல்லாமல் தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருந்து வருகின்றது எனவும், இதை தொடர்ந்தால் முழு ஊரடங்கை தள்ளிவைக்கவும், தவிர்க்கவும் வாய்ப்புண்டு.

கோவையில் தற்போது எதிர்ப்பு சக்தி 43 சதவீதமாக இருக்கும் நிலையில் இதை அதிகரிக்க தடுப்பூசி மட்டுமே வழி எனவும் தெரிவித்த அவர், கோவைக்கு தடுப்பூசிகள் அதிகம் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். மூன்றாவது அலை ஓரே மாதத்தில் கூட வரலாம் என்பதால், கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

கோவையில் உள்ள அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனை, இ.ஸ்.ஐ மருத்துவமனைகளில் தேவையான ஆக்ஸிஜன் படுக்கை, வென்டிலேட்டர்கள் இருகின்றது. ஒரு வாரத்தில் படுக்கைகளை உயர்த்தி கொள்ள முடியும். ஆக்ஸிஜன் டேங்க் ஓன்று சென்னையில் இருந்து கோவை மருத்துவமனைக்கு மாற்றபடவுள்ளது.

கோவையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து இருப்பதால், இம்முறை அதிக உயிர் சேதம் இல்லாமல் 3 வது அலையை நம்மால் எதிர் கொள்ள முடியும். எனினும், அடுத்த 2 மாதங்களுக்கு மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த முறை குழந்தைகளுக்கு பாதிப்பு வந்தால் அதை எதிர் கொள்ள தயாராக இருக்கின்றோம், அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கு என 124 ஆக்ஸிஜன் படுக்கைகளும், 82 ஐ.சி.யு படுக்கைகளும் தயாராக இருக்கின்றது,. இ.எஸ்.ஐ மருத்துவமனையில் ஆக்ஸிஜன் படுக்கைகள் 40, ஐ.சி.யு படுக்கைகள் 30 தயாராக இருக்கின்றது. நோய் தொற்றை கையாள தேவையான மருத்துவர்களும் கோவையில் இருக்கின்றனர்.



பேட்டியின் போது, மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுங்கரா மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...