கோவை சேரன் மாநகர் பகுதியில் ஆடிட்டர் வீட்டை உடைத்து நகை திருட்டு

கோவை: கோவையில் ஆடிட்டர் வீட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் வீட்டில் இருந்த நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர். ஊருக்கு சென்றிருந்த போது இந்த திருட்டுச் சம்பவம் நடந்துள்ளது.


கோவை: கோவையில் ஆடிட்டர் வீட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் வீட்டில் இருந்த நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர். ஊருக்கு சென்றிருந்த போது இந்த திருட்டுச் சம்பவம் நடந்துள்ளது.

பீளமேடு சேரன் மாநகர் பகுதியைச் சேர்ந்த தில்லை நடராஜன் என்பவரின் மகன் முத்தமிழ்செல்வன்(51). இவர் ஆடிட்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊரான தஞ்சாவூருக்கு குடும்பத்தாருடன் சென்றார். மீண்டும் நேற்று காலை கோவைக்கு திரும்பினார்.

அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த பொழுது பீரோவில் வைக்கப்பட்டிருந்த வெள்ளி விளக்குகள், வெள்ளி கிண்ணங்கள், குங்குமச்சிமிழ், வெள்ளி தட்டுகள், வெள்ளி நாணயங்கள், தங்க கம்மல்கள், தங்க நகை உள்ளிட்ட பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, அவர் பீளமேடு போலீஸில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...