கோவையில் கடைக்கு மொத்தமாக அரிசி வேண்டுமென ஆர்டர் கொடுத்து. லாரியில் வரவழைத்து திருடிய கும்பல் கைது..!

கோவை: கோவையில் கடைக்கு மொத்தமாக அரிசி வேண்டுமென ஈரோடு அரிசி மில்லுக்கு ஆர்டர் கொடுத்து. லாரியில் வரவழைத்து திருடிய கும்பல் கைது செய்யப்பட்டனர். இந்தத் திருட்டில் சம்பந்தப்பட்ட ஒருவருக்கு வலைவீசி போலீஸார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவையில் கடைக்கு மொத்தமாக அரிசி வேண்டுமென ஈரோடு அரிசி மில்லுக்கு ஆர்டர் கொடுத்து. லாரியில் வரவழைத்து திருடிய கும்பல் கைது செய்யப்பட்டனர். இந்தத் திருட்டில் சம்பந்தப்பட்ட ஒருவருக்கு வலைவீசி போலீஸார் தேடி வருகின்றனர்.

கோவையில் மொத்தமாக அரிசி கடை வைத்திருப்பதாகவும். விற்பனைக்காக அரிசி வேண்டுமென ஈரோட்டில் உள்ள அரிசி மில்லுக்கு போன் செய்து லாரியில் வரவழைத்து லாரியில் இருந்து அரிசியை திருடிய கும்பல் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பான மேலும் ஒருவரை போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் கோவை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது...

‘‘ஈரோடு மாவட்டம் பவானி காலிங்கராயன்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரின் மனைவி சாந்தி(41). இவர் அன்னலட்சுமி மாடர்ன் ரைஸ் மில் என்ற அரிசி நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரை தொடர்பு கொண்ட கோவை குனியமுத்தூர் ஐயப்பா நகர் பகுதியைச் சேர்ந்த அப்துல் வகாப் என்பவரின் மகன் அஷ்ரப்(38), தான் எஸ்.எம். இந்திக் என்ற ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருவதாகவும் தனக்கு அரிசி தேவைப்படுவதாகவும் கூறியிருக்கிறார்.

இதையடுத்து, சாந்தி 11 1/2 டன் பொன்னி அரிசி அரிசி மூடைகளை லாரி மூலம் ஏற்றி தனது நிறுவன மேலாளர் ரஞ்சித்துடன் அனுப்பி வைத்தார்.

கருமத்தம்பட்டி முத்து கவுண்டன் புதூர் பகுதியில் அரிசியை பணம் கொடுத்து பெற்றுக் கொள்வதாகக் கூறியிருந்தார் அஷ்ரப்.

இதை நம்பி அங்கு வந்த மேனேஜர் ரஞ்சித்திடம் தற்போது இரவு நேரமாகிவிட்டது. மறுநாள் காலை வந்து பணம் பெற்றுக் கொள்ளுமாறு அஷ்ரப் கூறியிருக்கிறார் .

மேலும், பணத்தை கொடுத்துவிட்டு அரிசி மூட்டைகளை எடுத்துச் செல்வதாகவும் கூறியிருக்கிறார்.

இதையடுத்து, அரிசி லாரியை அங்கு நிறுத்திவிட்டு மேனேஜர் ரஞ்சித் தனது ஊருக்கு திரும்பினார். மீண்டும் மறுநாள் காலை லாரி நிறுத்தப்பட்டுள்ள இடத்திற்கு சென்று பார்த்த பொழுது லாரியில் இருந்த அரிசி மூட்டைகள் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து அஷ்ரப்பிடம் ரஞ்சித் கேட்டபோது சரியான பதில் அளிக்காமல் இருந்தார். இதையடுத்து தனது உரிமையாளர் சாந்தியிடம் நடந்த விவரத்தை ரஞ்சித் கூறியுள்ளார்.

தொடர்ந்து சாந்தி சூலூர் போலீஸ் ஸ்டேஷனில் இதுகுறித்து புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீஸார், பணம் கொடுப்பதாகக் கூறி அரிசி மூட்டைகளை மோசடியாக வரவழைத்து பின்னர் அவற்றை திருடியதைக் கண்டுபிடித்து உறுதிசெய்தனர்.

இதையடுத்து கோவை செல்வபுரம் கல்லாமேடு பகுதியைச் சேர்ந்த பாபு என்பவரின் மகன் மன்சூர்கான்(27), போத்தனூர் மஸ்தான் சாயபு வீதியைச் சேர்ந்த அபூபக்கர் என்பவரின் மகன் சலீம்(42), உக்கடம் அன்பு நகர் பகுதியைச் சேர்ந்த அபூபக்கர் என்பவரின் மகன் அப்பாஸ்(43)ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் தலைமறைவாக உள்ள கோவை குனியமுத்தூர் ஐயப்பா நகர் பகுதியை சேர்ந்த அப்துல் வகாப் என்பவரின் மகன் அஷ்ரப்(38) என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

Newsletter

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...