குறு சிறு தொழிற்சாலைகளை மாலை 5 மணிக்கு மேல்‌ அடைக்கும்படி நிர்ப்பந்திப்பது குறித்து ஆட்சியருக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை மனு..!

கோவை: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக குறு சிறு தொழிற்சாலைகளை மாலை 5 மணிக்கு மேல்‌ அடைக்கும்படி நிர்ப்பந்திப்பது குறித்து ஆட்சியருக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பினர் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.


கோவை: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக குறு சிறு தொழிற்சாலைகளை மாலை 5 மணிக்கு மேல்‌ அடைக்கும்படி நிர்ப்பந்திப்பது குறித்து ஆட்சியருக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பினர் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பினர் மாவட்ட ஆட்சியருக்கு அளித்துள்ள கோரிக்கை மனுவில், ‘‘கொரொனா தடுப்பு விதிமுறைகள்‌ குறித்து தமிழக அரசின்‌ தொடர்ச்சியான வழிகாட்டுதல்கள்‌ படியும்‌ கோவை மாவட்ட ஆட்சியர்‌ 31.07.2021 அன்று வெளியிட்டுள்ள அறிவிக்கை (ந.க.எண்‌ 8106/2021) படியும்‌ நாங்கள்‌ பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக அனுசரித்து இயங்கி வருகிறோம்‌.

கொரோனா பெருந்தொற்று பரவலுக்கு எந்த விதத்திலும்‌ காரணமாகி விடக்கூடாது என கவனமாக இருந்து வருகிறோம்‌.

மாவட்ட ஆட்சியரின்‌ உத்தரவின்படி மாலை 5 மணிக்கு மேல்‌ கடைகள்‌, வணிக நிறுவனங்கள்‌ மட்டுமே மூடப்பட வேண்டும்‌. சிறு குறு தொழிற்சாலைகள்‌ இயங்குவதற்கு எந்த ஒரு தடையும்‌ விதிக்கப்படவில்லை.

இந்தநிலையில்‌, கோவை மாநகராட்சியின்‌ கண்காணிப்பு படையினர்‌ இரத்தினபுரி போன்ற பகுதிகளில்‌ தொழிற்சாலைகளை 5 மணிக்கு மேல்‌ மூடுமாறு, சென்ற சனிக்கிழமை (07.08.2021) அன்று நிர்ப்பந்தம்‌ செய்துள்ளனர்‌. அபராதங்களை விதிக்கின்றனர்‌. ஒரு சிலருக்கு ரசீது ஏதும்‌ கொடுக்காமலும்‌ அபராதத்‌ தொகையை மட்டும்‌ வசூலித்துள்ளனர்‌.

சிறு குறு தொழிற்சாலைகள்‌ ஏற்கெனவே இரண்டு மாத ஊரடங்கு, மூலப்‌ பொருள்‌ விலை உயர்வு போன்ற பல பிரச்னைகளால்‌ நலிவடைந்து துன்பத்தில்‌ உள்ளன. பாதிப்பில்‌ இருந்து மீண்டுவர கடுமையாகப் போராடி வருகின்றன.

இந்தநிலையில்‌, கோவை மாநகராட்சி அதிகாரிகள்‌ விதிமுறைகளை மீறி தன்னிச்சையாக அபராதங்கள்‌ விதிப்பதும்‌ கெடுபிடி செய்வதும்‌, எங்களுக்கு மனச்சோர்வை அளிக்கிறது. தாங்கள்‌ உடனடியாக தலையிட்டு தொழிற்சாலைகள்‌ 24 மணி நேரமும்‌ இயங்க தடை ஏதுமில்லை என்பதை, மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்துமாறு பணிவுடன்‌ கேட்டுக்‌ கொள்கிறோம்‌'' என்று தெரிவித்துள்ளனர்.

Newsletter

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...