உடுமலையில் பழங்குடியினர் தின விழா மலைவாழ் மக்களுக்கு இனிப்புகளை வழங்கி வனத்துறையினர் கொண்டாட்டம்..!

கோவை: ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வரும் பழங்குடியினர் தின விழா இன்று, உடுமலை வனக்கோட்டத்தில் உள்ள மலைக்கிராமங்களில் வனத்துறையினரால் மலைவாழ் மக்களுக்கு இனிப்புகளை வழங்கிக் கொண்டாடப்பட்டது.


கோவை: ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வரும் பழங்குடியினர் தின விழா இன்று, உடுமலை வனக்கோட்டத்தில் உள்ள மலைக்கிராமங்களில் வனத்துறையினரால் மலைவாழ் மக்களுக்கு இனிப்புகளை வழங்கிக் கொண்டாடப்பட்டது.

சர்வதேச பழங்குடியினர் தினவிழா ஆண்டுதோறும் ஆகஸ்ட் 9ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதிலும் 90 நாடுகளில் 37 கோடி பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்தியாவில் மட்டும் சுமார் 7.5 கோடி பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். உலகில் உள்ள பழங்குடியின மக்களின் பாதுகாப்புக்காகவும் உரிமைக்காகவும் இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.



உடுமலை வனக் கோட்டத்தில் 17 மலைக் கிராமங்கள் உள்ளது. இதில் 3,000-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்தநிலையில், பழங்குடியினர் தினத்தைக் கொண்டாடும் வகையில் கரட்டுப்பதி பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமத்துக்கு சென்ற வனத்துறையினர் அவர்களுக்கு இனிப்புகளை வழங்கினர். பழங்குடியினர் கிராமத்துக்குச் சென்ற வனத்துறையினருக்கு இசைக்கருவிகளை இசைத்தும் நடனமாடியும் மலைவாழ் மக்கள் வரவேற்பளித்தனர்.



இந்த விழாவில் உதவி வனப் பாதுகாவலர் கணேஷ் ராம் கலந்துகொண்டு தலைமை தாங்கினார். இவ்விழாவுக்கு பிறகு ஒன்பதாறு சோதனைச்சாவடி அருகே வனத் துறையில் பணியாற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த வேட்டை தடுப்பு காவலர்களுக்கு காலணிகள் வழங்கப்பட்டது. மேலும், உடுமலை பகுதியில் உள்ள உடுமலை, அமராவதி, கொழுமம், மற்றும் வந்தரவு ஆகிய நான்கு வனச்சரகத்திலும் பழங்குடியினர் தினம் கொண்டாடப்பட்டது.

Newsletter

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...