வால்பாறை காவல் நிலையத்தில் கார் வேன் ஓட்டுநர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது..!

கோவை: வால்பாறை காவல் நிலையத்தில் ஆய்வாளர் கற்பகம் தலைமையில் வால்பாறை வேன், கார் உரிமையாளர் சங்கத் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


கோவை: வால்பாறை காவல் நிலையத்தில் ஆய்வாளர் கற்பகம் தலைமையில் வால்பாறை வேன், கார் உரிமையாளர் சங்கத் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.



கோவை மாவட்டம் வால்பாறை காவல் நிலையத்தில் வால்பாறையிலுள்ள 7th haven டாக்ஸி டெம்போ ஓட்டுநர் சங்கத்தினருடனான ஆலோசனைக் கூட்டம் காவல் ஆய்வாளர் கற்பகம் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவரின் மறு உத்தரவு வரும்வரை சுற்றுலா பயணிகளை வாகனங்களில் ஏற்றிச்செல்வதை முழுவதும் தவிர்க்க வேண்டும். ஒருவேளை பேருந்துகளில் அத்துமீறி சுற்றுலா பயணிகள் வால்பாறை பகுதிக்கு வந்தாலும் அவர்களைப் பற்றிய தகவலையும் தெரியப்படுத்த வேண்டும். மீண்டும் சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க அதற்கான உரிய உத்தரவு வந்தாலும் திருமணமாகாத ஆண்-பெண் யாரேனும் தங்களின் வாகனங்களில் ஏற்றிச் செல்ல நேர்ந்தால் அவர்களை முழுமையாகக் கண்காணிக்க வேண்டும். சந்தேகம் ஏற்படும் விதமாக அவர்கள் நடந்து கொண்டாலோ அல்லது வேறெதாவது கிரிமினல் குற்றச்சம்பவங்கள் செய்வது பற்றி தெரியவந்தாலோ உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கவேண்டும்.

அதில் மிக முக்கியமாக மலைப்பிரதேசங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகளால் எந்த ஒரு குற்றச்சம்பவங்களும் நடைபெறாமலிருக்கவும் அவைகளைத் தடுக்கவும் காவல் துறையினருக்கு வாகன ஓட்டிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் காவல் ஆய்வாளர் அனைவரிடமும் கேட்டுக்கொண்டு காவல் துறையினரின் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் வழங்கினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சங்கத்தலைவர் சுரேஷ், துணைத்தலைவர் பாபு, செயலாளர் பிரபு, பொருளாளர் முனீஸ்வரன், சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் விஸ்வநாதன் செயற்குழு உறுப்பினர்கள் மனோஜ் மற்றும் சங்க நிர்வாகிகளும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

Newsletter

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...