பொள்ளாச்சியில் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்யும் திட்டம்.!! கைவிட வேண்டி கிருஷ்ணா குளம் பாசன விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை!!

கோவை: பொள்ளாச்சி நகராட்சி கழிவுநீரைச் சுத்திகரிப்பு செய்து தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்யும், திட்டத்தை அரசு கைவிட வேண்டும் எனக் கிருஷ்ணா குளம் பாசன விவசாயிகள் அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர்.


கோவை: பொள்ளாச்சி நகராட்சி கழிவுநீரைச் சுத்திகரிப்பு செய்து தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்யும், திட்டத்தை அரசு கைவிட வேண்டும் எனக் கிருஷ்ணா குளம் பாசன விவசாயிகள் அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர்.

பொள்ளாச்சி நகராட்சி சாக்கடை கழிவுநீர் மற்றும் மழைநீர், ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் கிருஷ்ணா குளம் சென்றடைகிறது.

இதன் மூலம் ஜமீன்முத்தூர், ஜலத்தூர், ராமபட்டணம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் பாசன நிலங்கள் காலங்காலமாகப் பயன் பெறுகிறது.

மேலும் 19-அணைக்கட்டுகளும், 396-கிணறுகள் பயன் பெறுவதோடு அப்பகுதியில் உள்ள நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

இந்நிலையில், பொள்ளாச்சி நகராட்சி பாதாளச் சாக்கடை திட்டத்தில், கழிவு நீர் சுத்திகரிப்பு செய்து தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்யப்போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு மேற்கு பகுதியில் உள்ள கிருஷ்ணா குளம் விவசாயிகள் மத்தியில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து பொள்ளாச்சி அருகே உள்ள ராமநாதபுரத்தில் கிருஷ்ணா குளம், காளிங்கராயன் அணைக்கட்டு பாசன விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.



இதில் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் தாமோதரன், திமுக மாநில விவசாயிகள் அணி துணைச் செயலாளர் தமிழ்மணி உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.



கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் கூறுகையில், நகராட்சி பகுதியிலிருந்து வரும் சாக்கடை கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்டு, கிழக்குப் பகுதிக்குக் கொண்டு சென்றால், மேற்குப் பகுதியில் உள்ள பாசனப் பகுதிகளில் வறட்சி ஏற்பட்டுவிடும், மழைப்பொழிவு இல்லாத நேரங்களில் இந்த கழிவுநீரை நம்பித்தான் காலங்காலமாக விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனர்.

தற்போது இந்த தண்ணீரைக் கிழக்குப் பகுதிக்குக் கொண்டு சென்றால் கிருஷ்ணா குளத்தை நம்பியுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும் எனவே இந்த திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...