கொரோனா கால பணிச்சுமையில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி அங்கன்வாடி ஊழியர்கள் பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் மனு..!

கோவை: கொரோனா பெருந்தொற்று கால பணிச் சுமையில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி அங்கன்வாடி ஊழியர்கள் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.


கோவை: கொரோனா பெருந்தொற்று கால பணிச் சுமையில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி அங்கன்வாடி ஊழியர்கள் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

கோவை மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் முன்கள பணியாளர்களாக மாவட்ட நிர்வாகம் நியமனம் செய்யப்பட்டு, கொரோனா பெருந்தொற்று கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது கோவை மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், சுமார் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்தநிலையில் சுகாதாரத் துறை, வருவாய்த் துறை, உள்ளிட்ட நான்கு துறை அதிகாரிகளும் பல்வேறு பணிகளை மேற்கொள்ள வேண்டும். நெருக்கடி கொடுப்பதால், பணிச்சுமை அதிகரித்து, மன உளைச்சல் ஏற்படுவதாகக் கூறி, இன்று நூற்றுக்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

அங்கன்வாடி மையங்கள் திறக்கப்பட சூழ்நிலையையும் துறை சார்ந்த பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், முன்களப்பணியாளர்களாக பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் தங்களுக்கு, அரசு அறிவித்த ஊக்கத்தொகையும் இதுவரை வழங்கப்படாதது வருத்தமளிப்பதாகத் தெரிவித்த பணியாளர்கள், கொரோனா பணியிலிருந்து மாவட்ட நிர்வாகம் விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...