வால்பாறையில் தொழிற்சங்கத் தலைவர்கள் மத்திய அரசைக் கண்டித்து ஆர்பாட்டம்..!

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள எல்.பி.எஃப் தொழிற்சங்கத்தின் கூட்டுக்குழு சங்கத்தின் சார்பாக வால்பாறையிலுள்ள காந்தி சிலை பேருந்து நிலையத்தில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள எல்.பி.எஃப் தொழிற்சங்கத்தின் கூட்டுக்குழு சங்கத்தின் சார்பாக வால்பாறையிலுள்ள காந்தி சிலை பேருந்து நிலையத்தில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



வால்பாறையில் உள்ள எல்.பி.எஃப். சங்கத்தின் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் வினோத்குமார் தலைமையில் தலைவர் கோழிக்கடை கணேசன், ஏஐடியுசி தாலுகா செயலாளர் மோகன், விடுதலைச்சிறுத்தைகள் வீரமணி, மதிமுக தொழிற்சங்கத் தலைவர் கல்யாணி, காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் பேபி ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் மற்றும் தொழிலாளர் பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஜிஎஸ்டி விலைவாசி உயர்வை கண்டித்தும் விவசாயிகளின் வாழ்வாதாரம் போன்றவைகளை கண்டித்தும் கைவிட வலியுறுத்தியும் அனைத்து கட்சி தொழிற்சங்கங்கள் தலைவர்கள் கட்சிக் கொடியைப் பிடித்து பல்வேறு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு போக்குவரத்துக்கழக எல்.பி.எஃப் தொழிற் சங்க நிர்வாகிகள், சிஐடியு நிர்வாகிகள் மற்றும் கூட்டுக்குழு சங்கத்தின் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Newsletter

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...