செல்போன் கடைகள் செயல்பட கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டும்-பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு!!

கோவை: செல்போன் கடைகள் செயல்பட கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டும் செல்போன் கடை உரிமையாளர்கள் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


கோவை: செல்போன் கடைகள் செயல்பட கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டும் செல்போன் கடை உரிமையாளர்கள் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கோவை மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மாவட்ட நிர்வாகம் மக்கள் அதிகமாகக் கூடும் வணிக வளாகங்கள் மற்றும் பல்வேறு விற்பனை கடைகளுக்கு நேரம் குறைக்கப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.



இதனால் செல்போன் கடை உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால் செல்போன் கடைகள் செயல்படக் கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டும் என்று பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் செல்போன் கடை உரிமையாளர்கள் மனு அளித்தனர்.

செல்போன் விற்பனையைச் சிறு தொழிலாகச் செய்துவரும் நிலையில், ஏற்கனவே ஊரடங்கு காரணமாக வியாபாரம் நலிவடைந்து

பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வாழ்வாதாரத்தை இழந்துள்ளோம்.

பெரும்பான்மையான செல்போன் வியாபாரம் ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது. இதனால் கடைகளில் செல்போன் வியாபாரம் குறைவாகவே உள்ளது. அரசிடமிருந்து எங்களுக்கு எந்த சலுகையும் கிடைப்பதில்லை. கடை வாடகை, மின் கட்டணம் இதர செலவுகளைச் சமாளிக்க முடியாததால் கடைகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை செல்போன் கடைகள் செயல்பட மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்து செல்போன் கடை வியாபாரிகளுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...