திருப்பூரில் ரேஷன் கடைகளில் முறைகேடு நடப்பதாகக் கூறிய மூதாட்டியை அழைத்துச் சென்று வாக்குவாதம் செய்த சட்டமன்ற உறுப்பினர்.!!

திருப்பூரில் ரேஷன் கடைகளில் முறைகேடு நடப்பதாகக் கூறிய மூதாட்டியைச் சட்டமன்ற உறுப்பினர் தன் காரில் அழைத்துச் சென்று ரேஷன் கடையில் வாக்குவாதம் செய்தார்.


திருப்பூர்: திருப்பூரில் ரேஷன் கடைகளில் முறைகேடு நடப்பதாகக் கூறிய மூதாட்டியைச் சட்டமன்ற உறுப்பினர் தன் காரில் அழைத்துச் சென்று ரேஷன் கடையில் வாக்குவாதம் செய்தார்.



திருப்பூர் கே.வி.ஆர் நகர் பகுதியில் மாநகராட்சி பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டு வரும் பணிகளைத் திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் இன்று நேரில் ஆய்வு செய்தார்.

ஆய்வுப் பணிக்கு வரும் போது சட்டமன்ற உறுப்பினரின் காரை வழிமறித்த மூதாட்டி கன்னியம்மாள் திருப்பூர் கே.வி.ஆர் நகர்ப் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் பொருட்கள் விநியோகிக்கப்படவில்லை.

இதைக் கேட்டால் தரக்குறைவாக ரேஷன் கடை ஊழியர்கள் பேசுவதாகக் குற்றம் சாட்டினார். உடனடியாக அந்த மூதாட்டியைத் தனது காரில் ஏற்றிச் சென்ற சட்டமன்ற உறுப்பினர் கடைக்குச் சென்று அங்கிருந்த அலுவலர்கள் மற்றும் விற்பனையாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.



உடனடியாக முறையாகப் பொருட்கள் விநியோகிக்கப்பட வேண்டும் பொதுமக்களுக்கு உரிய மரியாதை கொடுக்கப்பட வேண்டும் எனவும் இல்லை என்றால் மேல் அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்க வேண்டிய சூழல் ஏற்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

பின்னர் சட்டமன்ற உறுப்பினர் அங்கேயே இருந்து கன்னியம்மாளுக்குத் தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து மேலும் தனது சொந்த பணத்தை உதவித்தொகையாகக் கொடுத்து எப்போது பிரச்சனை என்றாலும் தங்களை அழைக்கவும் என ஆறுதல் தெரிவித்தார்.

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...