ஊட்டி அரசு மருத்துவமனையில் குளுக்கோஸ் ஏற்றிய போது உடைந்து கையில் சிக்கிய ஊசி - கோவை அரசு மருத்துவர்கள் அகற்றி சாதனை!

கோவை: ஊட்டியில் அரசு மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணின் கையில் சிக்கி உடைந்த ஊசியை கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அகற்றினர்.


கோவை: ஊட்டியில் அரசு மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணின் கையில் சிக்கி உடைந்த ஊசியை கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அகற்றி சாதனை படைத்துள்ளனர்.

ஊட்டி ராஜ்பவன் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் பகதூர், கூலித்தொழிலாளி. இவரது மனைவி சஞ்சனா 28. இவர்களுக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது.

இவர் 2-வது பிரசவத்திற்காக கடந்த 4ம் தேதி ஊட்டியில் உள்ள சேட் அரசு மகப்பேறு மருத்துவமனையில் சஞ்சனாவை அனுமதித்தனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் குழந்தை பிறந்த நிலையில், குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதற்காக சஞ்சனாவின் கையில் குளுக்கோஸ் செலுத்தப்பட்டது. இதனை கழற்ற முயன்ற போது ஊசி மட்டும் உடைந்து கையின் நரம்புக்குள் சென்றது.

இதனை ஊட்டியில் உள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து எடுக்க முடியாத நிலையில், கோவை கொண்டு செல்ல வேண்டும் என உறவினர்களிடம் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் செவிலியர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து, சஞ்சனா கோவை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டார். அவரை பரிசோதனை செய்த வாஸ்குலர் சர்ஜன் டாக்டர் தீபன் தலைமையிலான மருத்துவ குழுவினர் சஞ்சனாவின் கையில் சிக்கியிருந்த ஊசியை வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்.

தற்போது, சஞ்சனா நலமுடன் இருப்பதாக மருத்துவமனையில் நிர்மலா தெரிவித்தார்.

Newsletter

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...