கோவை: கோவையில் அரசு ஊழியரை காலில் விழ வைத்த சம்பவத்தில் மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி ஜாதியைச் சொல்லி திட்டுதல், பணி செய்ய விடாமல் தடுத்தல், வன்கொடுமை தடுப்பு பிரிவு உட்பட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை அருகே கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் பணியாற்றிய உதவியாளரை திட்டி காலில் விழ வைத்த சம்பவம் வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலானது.
இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின் படி, பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கோவை மாவட்டம், அன்னூர் அருகே ஒட்டர் பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்தில் நபர் ஒருவரால் வீடியோ பதிவு செய்யப்பட்டு 07.08.2021 அன்று சமூக வலைதளங்கள் மற்றும் தொலைக்காட்சி செய்திகளில் வெளியானது.
இது குறித்து கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜி.எஸ்.சமீரன், கோவை மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், மற்றும் வருவாய் கோட்டாட்சியர் கோவை வடக்கு ரவிச்சந்திரன் மற்றும் அன்னூர் வட்டாட்சியர் ரத்தினம் ஆகியோர்களை விசாரணைக் குழு அமைத்து விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டது.
அதன்பேரில், மேற்படி குழுவானது ஒட்டர் பாளையம் கிராம நிர்வாக அலுவலகம் சென்று நேரில் விசாரித்ததில் மேற்படி சம்பவம் நடந்தது உண்மை என உறுதி செய்து அறிக்கை அளித்துள்ளனர்.
இந்த நிலையில், மாவட்ட ஆட்சியாளர் அவர்களின் அறிக்கை படி, நேற்று 8-ஆம் தேதி கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வியும், கிராம உதவியாளர் முத்துச்சாமியும் அன்னூர் காவல் நிலையம் சென்று கோபால்சாமி மீது கொடுத்த புகார் அளித்தனர்.
இதையடுத்து, அரசு ஊழியரை தனது பணியை செய்யவிடாமல் இடையூறு செய்து தடுத்ததற்காக இ.த.ச.353 பிரிவிலும், மற்றும் கிராம உதவியாளரை ஜாதி பெயரை கூறி திட்டியதற்காக வன்கொடுமை தடுப்பு சட்டம் பிரிவு 3(1)(r),3(1)(s)&3(2)(Va) of SC/ ST (POA) Act 1989 ஆகிய பிரிவுகளிலும் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
மேலும், மேட்டுப்பாளையம் காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயசிங், புலன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.