கோனியம்மன் கோவிலை திறக்கக்கோரி, கோவை ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட பெண்ணால் பரபரப்பு

கோவை: ஒவ்வொரு திங்கட்கிழமை அன்றும், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்களுடைய கோரிக்கைகளை ஆட்சியரிடம் மனுவாக அளிக்க மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொது மக்கள் வருவதால், ஆட்சியர் அலுவலகம் பரபரப்புடன் காணப்படும்.


கோவை: ஒவ்வொரு திங்கட்கிழமை அன்றும், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்களுடைய கோரிக்கைகளை ஆட்சியரிடம் மனுவாக அளிக்க மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொது மக்கள் வருவதால், ஆட்சியர் அலுவலகம் பரபரப்புடன் காணப்படும்.

இந்த நிலையில், இன்று ஆட்சியர் அலுவலக வாசலில் அம்மன் கோவில்களை திறக்க வலியுறுத்தி, பெண் ஒருவர் சாணி பவுடர் குடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இன்று காலை, கோவை ஆட்சியர் சமீரன் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று அந்தந்த துறை அதிகாரிகளிடம் நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது கலெக்டர் அலுவலக வாசலில் மனு கொடுக்க வரக் கூடியவர்களை ஒழுங்குபடுத்தி அனுப்புவதற்காக பாதுகாப்பு பணியில் பெண் மற்றும் ஆண் காவல்துறையினர் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு பெண், திடீரென அலுவலக வாசலில் அவர் மறைத்து வைத்திருந்த பாட்டிலில் இருந்த சாணி பவுடரை எடுத்துக் குடிக்க முயன்றார்.



உடனடியாக, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து பேசிய அந்த பெண், ஆடி அமாவாசை, ஆடி வெள்ளி, ஆடி மாதம் முழுவதும் பெண்கள் விரதமிருந்து அம்மனை வழிபடுவது வழக்கம். ஊரடங்கு காரணமாக தொடர்ந்து கோயில்கள் குறிப்பாக அம்மன் கோயில்கள் மூடப்பட்டுள்ளது.

அதனால், பக்தர்கள் அம்மனை தரிசிக்க முடியாமல் கோயிலின் வெளியே நின்று தரிசிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அதனால், கோயில்களை உடனடியாக திறக்க வேண்டும் என அந்தப் பெண் புலம்பினார்.



தொடர்ந்து போலீசார் அந்த பெண்ணை பத்திரமாக மீட்டு காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தபோது, அவர் பூ மார்க்கெட், மாகாளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த முத்துலட்சுமி வயது 40, என்பது தெரியவந்தது.

பெண் போலீஸார் மூலமாக, அந்தப் பெண்ணிற்கு நோய் தடுப்பு சூழ்நிலையை விளக்கி, அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால், சிறிது நேரம் ஆட்சியர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.

இந்த நிலையில், இன்று காலை மனு அளிக்க வந்த பெண் ஒருவர் சாணி பவுடர் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்கொலைக்கு முயன்ற அப்பெண்ணை தடுத்து நிறுத்திய போலீசார் அவரை விசாரித்ததில், அப்பெண்ணின் பெயர் முத்துலட்சுமி என்பதும், அவர் பூ மார்க்கெட் பகுதி மாகாளியம்மன் தெருவில் வசிப்பவர் என்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து அருகில் இருந்த போலீசார் உடனடியாக அந்தப் பெண்மணியை தடுத்து நிறுத்தி அழைத்துச் சென்றனர். இதனால் சிறிது நேரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...