செல்போன் தொடர்ந்து பயன்படுத்துவதை தாயார் கண்டித்ததால் கோவை மாணவி தூக்குப்போட்டு தற்கொலை..!

கோவை: செல்போன் அதிகமாக பயன்படுத்துவதை தாயார் கண்டித்ததால் கோவையில் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: செல்போன் அதிகமாக பயன்படுத்துவதை தாயார் கண்டித்ததால் கோவையில் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ரத்தினபுரி சங்கனூர் ரோடு சண்முக நகர் பகுதியைச் சேர்ந்த தங்கராசு என்பவரின் மகன் கண்ணன் என்கிற அப்துல்காதர்(42). இவரது மகள் பவுசியா(15) கணபதி பகுதியில் உள்ள சிஎம்எஸ் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் இயங்காமல் ஆன்லைன் மூலமே வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதற்கு செல்போன் ஒன்றை அவரது குடும்பத்தார் வாங்கிக் கொடுத்துள்ளனர்.

பவுசியா வகுப்பு நேரம் போக மற்ற நேரங்களிலும் தொடர்ந்து செல்போன் பயன்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதை அவரது தாயார் கண்டித்துள்ளார். இதனால் அவருக்கும் அவரது தாயாருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதனால் பவுசியா மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார். இந்தநிலையில், பவுசியா வெள்ளிக்கிழமை மாலை வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வெளியில் சென்றிருந்த அவரது பெற்றோர் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது மகள் தூக்கில் பிணமாகத் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து அவரது தந்தை கண்ணன் என்கிற அப்துல் காதர் துடியலூர் போலீஸில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பவுசியாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீஸார் 174-வது சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செல்போன் பயன்படுத்துவதை தாயார் கண்டித்ததால் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...