'சமூக வலைத்தளங்கள் பெண்களை உருவாக்க மட்டுமே உருக்குலைக்க அல்ல' -கோவை சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி!!

கோவை:கோவையில் உள்ள கல்லூரி மாணவிகளுக்கு சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் முறை மற்றும் அதில் உள்ள ஆபத்துகள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.


கோவை:கோவையில் உள்ள கல்லூரி மாணவிகளுக்கு சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் முறை மற்றும் அதில் உள்ள ஆபத்துகள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.

கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் சார்பாகப் பெண்கள் சமூக வலைத்தளங்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு விளக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் 180 -க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.

அவர்களுக்கு சமூக வலைத்தளங்கள் பெண்களை உருவாக்க மட்டுமே உருக்குலைக்க அல்ல என அவர்களுக்கு பல்வேறு விதமான விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

இதுகுறித்து போலீசார் செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் இ.கா.ப., உத்தரவின் பேரிலும், கோவை மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சங்கு அறிவுறுத்தலின் படியும்,

கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயதேவ அவர்கள் நேற்று (07.08.2021) Google meet மூலம் ஶ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் பயிலும் சுமார் 180மாணவ-மாணவியர்களுக்கு 'Modus operandi of Recent Cyber Crimes' என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இவ்விழிப்புணர்வில் சமூக ஊடகங்களைப் பெண்கள் கையாளவேண்டிய விதம் பற்றியும் மற்றும் அதனைப் பயன்படுத்தும் முறை பற்றியும் விரிவாக எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயதேவி நடத்திய இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியானது இணைய வாயிலாக நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...